Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

09th August 2020 12:51:22 Hours

மறைந்த இராணுவ உயரதிகாரியான லெப்டினன்ட் ஜெனரல் கொபேகடுவ அவர்களுக்கு மலரஞ்சலி

புகழ்பெற்ற மறைந்த இராணுவ உயரதிகாரியான லெப்டினன்ட் ஜெனரல் டென்சில் கொபேகடுவ அவர்களது 28 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு அநுராதபுரத்தில் நகர பகுதியில் அமைந்துள்ள அவரது நினைவுச் சிலைக்கு இராணுவ படைக்கலச் சிறப்பணியினால் இம் மாதம் (8) ஆம் திகதி மாலை இராணுவ கௌரவ அஞ்சலிகள் செலுத்தப்பட்டன.

கடந்த 1992 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 08 ஆம் திகதி யாழ் அராலி பகுதியில் வைத்து எல்டிடிஈ பயங்கரவாதிகளின் கண்ணிவெடி தாக்குதலின் போது இந்த இராணுவ உயரதிகாரி மற்றும் பாதுகாப்பு உயரதிகாரிகள் நாட்டிற்காக பலியாகினர்.

லெப்டினன்ட் ஜெனரல் டென்சில் கோபேகடுவ ஈழப் போர்களின் ஆரம்ப நடவடிக்கைகளின் போது இலங்கை இராணுவத்திற்கு தலைமை வகித்த உயரதிகாரியாவார். கடந்த 1992 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் திகதி பாதுகாப்பு உயரதிகாரிகளான கஜபா படையணியை ஸ்தாபித்த ஆரம்ப தந்தையான மேஜர் ஜெனரல் விஜய விமலரத்ன, , ரியர் அத்மிரால் மொகன் ஜெயமஹா, லெப்டினன்ட் கேணல் எச்.ஆர். ஸ்டீபன், லெப்டினன்ட் கேணல் ஜி.எச். அரியரத்ன, லெப்டினன்ட் கேணல் ஒய்.என். பலிபனா, கொமான்டர் அசங்க லங்காதிலக, லெப்டினன்ட் கேணல் நலின் டி அல்விஸ், லெப்டினன்ட் கொமாண்டர் சி.பி.விஜேபுர மற்றும் போர் வீரரான டபிள்யூ.ஜே. விக்ரமசிங்க எல்டிடிஈ பயங்கரவாத தாக்குதலுக்கு இலக்காகி பலியாகியுள்ளனர்.

இந்த நினைவு தின நிகழ்வில் ஆரம்பத்தில் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த படை வீரர்களை நினைவு கூர்ந்து இரண்டு நிமிட மௌன அஞ்சலிகள் செலுத்தி கௌரவிக்கப்பட்டன. பின்பு இராணுவ சம்பிரதாய முறைப்படி லெப்டினன்ட் ஜெனரல் டென்சில் கொபோகடுவ அவர்களது நினைவுச் சிலைக்கு மலர்மாலைகள் சூட்டி அஞ்சலிகள் செலுத்தப்பட்டன.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக 12 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதியும், படைக்கலச் சிறப்பணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் பிரதாப் திலகரத்ன அவர்கள் வருகை தந்தார். மேலும் இந்த நிகழ்வில் வடமத்திய பாதுகாப்பு முன்னரங்க கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ரஞ்சன் பிரேமலாள், 21 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் விகும் லியனகே, வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் அதிகாரிகள் மற்றும் படை வீரர்கள் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Asics shoes | Nike Air Force 1 Shadow White/Atomic Pink-Sail For Sale – Fitforhealth