Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

09th August 2020 22:18:51 Hours

பதவிக்காலத்தை நிறைவு செய்து செல்லும் யாழ் தளபதிக்கு கௌரவ மரியாதை

ஒரு வருடத்திற்கு மேலாக யாழ் பாதுகாப்பு படைத் தளபதியாக பதவி வகித்த மேஜர் ஜெனரல் ருவன் வனிகசூரிய அவர்கள் இராணுவ தொண்டர் படையணியின் தளபதியாக பதவியுயர்த்தப்பட்டு இம் மாதம் 08 ஆம் திகதி பதவியேற்க இருப்பதனால் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் இவருக்கு கௌரவ மரியாதைகள் வழங்கி வைக்கப்பட்டன. பின்னர் படைத் தளபதி அவர்களினால் காங்கேசன்துறை முன்னரங்க பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் வைத்து 51, 52 மற்றும் 55 ஆவது படையினர்களுக்கு உரையையும் நிகழ்த்தினார்.

பாதுகாப்பு முன்னரங்க கட்டளை தலைமையகத்திற்கு இம் மாதம் (7) ஆம் திகதி வருகை தந்த யாழ் தளபதியை 10 ஆவது பீரங்கிப் படையணியினரால் இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி வைத்து வரவேற்கப்பட்டார். பின்னர் படையினர் மத்தியில் உரையாற்றும் போது கடந்த ஆண்டில் பராமரிக்கப்பட்ட உயர் தொழில் முறை திட்டத்திற்கு பணியாற்றி ஒத்துழைப்பு வழங்கிய படையினர்களுக்கு நன்றியை தெரிவித்ததோடு, யாழ் குடாநாட்டில் அமைதியான சூழலைப் பேணுவதற்கு ஆற்றிய சேவையை கௌரவித்தார் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

யாழ் பாதுகாப்பு படைத் தளபதி யாழ் குடா நாட்டின் பாதுகாப்பை மேம்படுத்த பல நடவடிக்கைகளை மேற்கொண்டார். அத்துடன் யாழ் குடாநாட்டில் பாதுகாப்பு படைகள் மீதான மக்கள் நம்பிக்கையை வலுப்படுத்தவும் அமைதியான சுதந்திரமான சூழ்நிலைகளை யாழ் குடா நாட்டு மக்களுக்கு பெற்றுத் தந்தார்.

மேலும் யாழ் பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய அவர்களது வழிக்காட்டலின் கீழ் இராணுவத்தினரது திறன்களை மேம்படுத்தும் நோக்கத்துடன் இராணுவ முகாம் வளாகத்தினுள் உடற்பயிற்சி கூடம், இராணுவத்தினரது சுகாதார விடயத்தில் அக்கறை கொண்டு வசவிளான் பகுதிகளில் இராணுவ வைத்தியசாலை, நிர்மானிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டன. அத்துடன் யாழ் குடா நாட்டிற்கு ‘ரவிந்த வாவி’ குளத்திட்டத்தின் கீழ் நீர்ப்பாசன வசதிகளையும் மேற்கொண்டார்.

யாழ் படைத் தளபதி அவர்கள் நன்கொடையாளர்களின் நிதி உதவியுடன் யாழ் குடா நாட்டில் வாழ்வாதாரத்தில் பின் தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த குடும்பத்தாருக்கு வீடுகளை கட்டி உதவிகளை மேற்கொண்டார். Sport media | Nike Shoes