Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

09th August 2020 22:20:02 Hours

புதிய கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி உத்தியோகபூர்வமாக பதவியேற்பு

மேஜர் ஜெனரல் ஜே. சிந்தக கமகே அவர்கள் இம் மாதம் (8) ஆம் திகதி வெலிகந்தையில் அமைந்துள்ள கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக வளாகத்தினுள் 20 ஆவது படைத் தளபதியாக சமய சம்பிரதாய அனுஷ்டானங்களின் பின்பு பதவியேற்றுக் கொண்டார்.

படைத் தலைமையகத்திற்கு வருகை தந்த புதிய படைத் தளபதிக்கு 7 ஆவது பொறியியல் படையணியினால் இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி வைத்து பின்னர் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் உயரதிகாரிகளான பிரிகேடியர் பிரியந்த வீரசிங்க மற்றும் பிரிகேடியர் மனோஜ் லமா ஹேவா போன்ற அதிகாரிகளினால் வரவேற்கப்பட்டார்.

பின்னர் புதிய படைத் தளபதி அவர்கள் தனது பணிமனைக்கு வருகை தந்து ‘செத் பிரித்’ கோசங்களுக்கு மத்தியில் சமய சம்பிரதாய அனுஷ்டானங்களின் பின்பு உத்தியோகபூர்வமாக கையொப்பமிட்டு தனது புதிய பதவியை பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் தலைமையக வளாகத்தினுள் மரநடுகை மேற்கொண்டு தலைமையகத்தில் அதிகாரிகளுக்கு மத்தியில் சிறப்புரையை ஆற்றினார்.

மேஜர் ஜெனரல் சிந்தக கமகே அவர்கள் 24 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதியாக இருந்து கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதியாக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Nike Sneakers | Best Selling Air Jordan 1 Mid Light Smoke Grey For Sale 554724-092