Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

09th August 2020 15:43:33 Hours

மான்புமிகு புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ அவர்கள் களனி ரஜமஹா விகாரையில் பதவியேற்பு

இலங்கையின் மான்புமிகு புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ அவர்கள் இன்று காலை (9) ஆம் திகதி களனி ரஜமஹா விகாரையில் மேன்மை தங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ முன்னிலையில் தனது பிரதமர் பதவியை சமய அனுஷ்டான ஆசிர்வாதங்களின் பின்பு உத்தியோகபூர்வமாக பதவியேற்றுக் கொண்டார்.

மகா சங்க நாயக்க தேரர்களுடன் களனி ரஜமஹா விகாரையின் விகாராதிபதி மதிப்புக்குரிய கலாநிதி கொல்லுபிடிய ஶ்ரீ சங்கரக்கித்த நாயக தேரர் அவர்களது தலைமையில் ஆசிர்வாத பூஜைகளை இடம்பெற்றது. இச்சந்தர்ப்பத்தில் முதல் பெண்மணி திருமதி ஐயோமா ராஜபக்‌ஷ, பிரதமரின் பாரியாரான திருமதி சிரந்தி ராஜபக்‌ஷ, முன்னாள் ஜனாதிபதி மஹித்திரிபால சிறிசேன, ஆளுநர்கள், அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் இந்த மதவழிபாடுகளில் இணைந்திருந்தனர்.

மாண்புமிகு பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ அவர்கள் களனி விகாரையிலுள்ள புத்தபெருமானின் பிரதான சன்னதிக்கு சென்று வழிபாடுகளை மேற்கொண்டு பின்பு வருகை தந்து தேசிய கீதத்தினை இசைத்து மேன்மை தங்கிய ஜனாதிபதி முன்னிலையில் சத்தியபிரமானத்தை மேற்கொண்டு ‘செத் பிரித்’ கோஷங்களுக்கு மத்தியில் தனது புதிய பதவியை கையொப்பமிட்டு பொறுப்பேற்றுக் கொண்டார்.

இச்சந்தர்ப்பத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பி. பீ ஜயசுந்தர, பாதுகாப்பு பதவிநிலை பிரதானியும், இராணுவ தளபதியிமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா, கடற்படைத் தளபதி, விமானப் படைத் தளபதி போன்றோர் இணைந்திருந்தனர்.

பின்னர் புதிய பிரதமர் தனது குடும்ப உறுப்பினர்களுடன் சென்று மதவழிபாடுகளில் ஈடுபட்டார். பின்னர் நலன் விரும்பிகளை வாழ்த்தினார்.

மான்புமிகு மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் 2020 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி பாராளுமன்ற தேர்தலில் குருணாகல் மாவட்டத்தில் 527,364 பெறுபேறுகளை பெற்று பிரதமர் பதவிக்கு நியமிக்கப்பட்டார். அத்துடன் 2005 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு முதல் மேன்மை தங்கிய ஜனாதிபதியாக பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Best Nike Sneakers | Nike - Sportswear - Nike Tracksuits, Jackets & Trainers