Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

26th May 2020 20:00:31 Hours

ஜனாதிபதி செயலணியினர் கப்பல் உரிமையாளர்களோடு வெளிநாட்டு துறைமுகங்களில் சிக்கித் தவிப்பவர்களுக்கு உதவும் வழி முறைகள் ஆராய்வு

பாதுகாப்புத் தலைமை பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தலைமையில் ஜனாதிபதி செயலணியின் அரச துறை கொள்கை வகுப்பாளர்கள் கப்பல் உரிமையாளர்களுடனான கலந்துறையாடல் வெள்ளிக்கிழமை (22) பிற்பகல் இராணுவத் தலைமையகத்தில் நடைப்பெற்றது. இதன் போது, உலகளாவிய துறைமுகங்கள் கொவிட் 19 இல் உள்ள ஆபத்துகள் காரணமாக கப்பல்களில் உள்ளவர்களை ஏறுவதற்கோ இறங்குவதற்கோ அனுமதிக்க தயங்குகின்றன. இதனால் அவர்களை இலங்கை துறைமுகங்கள் ஊடாக சுழற்சி முறையில் மாற்றுவது தொடர்பான நடைமுறை சாத்தியப்பாடுகள் மற்றும் வழிமுறைகள் ஆராயப்பட்டன.

உலகளாவிய துறைமுகங்களில் இலங்கையர்கள் உட்பட கிட்டத்தட்ட 3000 கப்பல்களில் தொழில் செய்பவர்கள் உதவியற்ற நிலையில் சிக்கித் தவிக்கின்றனர். கடந்த இரண்டு மாதங்களில் இலங்கை இது போன்ற 12 பேரை கடலிருந்து மீட்டு தனிமைப்படுத்தியது. வெளிநாட்டு பங்காளர்களுடன் ஒருங்கிணைந்து சாத்தியமான வழிமுறைகளை உருவாக்க முடியும் என்று முன்னணி கப்பல் உரிமையாளர்கள் சுட்டிக்காட்டினர். இதன் போது தேவையான ஹோட்டல்களின் தன்மை, விமான நிலையம் மற்றும் துறைமுகங்களில் வெளியேற்றும் உத்திகள், அந்நடவடிக்கைகளுக்கான செலவுகள், ஏற்பாடுகளில் அரசுத் துறை மற்றும் தனியார் துறையின் பங்கு, சுகாதார நடைமுறைகள் போன்றவை விவாதிக்கப்பட்டன.

இலங்கை துறைமுக அதிகார சபைத் தலைவர் ஜெனரல் (ஓய்வு) தயா ரத்நாயக்க, ஜனாதிபதியின் வெளிநாட்டு விவகாரங்களுக்கான மேலதிக செயலாளர் அட்மிரல் (பேராசிரியர்) ஜெயநாத் கொலம்பகே, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா, கடற்படை நடவடிக்கைகளுக்கான பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் வைஎன். ஜயரத்ன, சுகாதார அமைச்சின் தனிமைப்படுத்தலுக்கான பிரதிப் பணிப்பாளர் டாக்டர் ரோஷன் சம்பத், சுகாதார அமைச்சின் டாக்டர் அர்னால்ட், குடிவரவு குடியகழ்வு உதவி கட்டுப்பாட்டாளர் திரு ஜயந்த ரத்நாயக்க, இலங்கை கப்பல் முகவர்கள் சங்கத்தின் தலைவர் திரு இக்ராம் குட்டிலன், இலங்கை கப்பல் சங்கத்தின் உதவித் தலைவர் திருமதி ஷெஹரா ஜயவர்தன, இலங்கை கப்பல் முகவர்கள் சங்கத்தின் திரு. எஸ். சாபர், திரு. பி. தாதல்லகே, திரு. ஏ. வெலகேதர, திரு. ஆர். மெண்டிஸ், திரு துலித் விஜயதிலக்க, ரக்னா லங்காவின் தலைவர் கேப்டன் ராஜரத்ன, மற்றும் எவன்ட் கார்ட் நிறுவனத்தின் தளபதி டபிள்யூஎன். தியபாலனகே ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.Mysneakers | Nike for Men