Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd May 2020 10:00:26 Hours

தியதலாவ 1 ஆவது கெமுன ஹேவா அதிகாரிகளினால் விடுமுறை பங்களா அபிவிருத்தி

இராணுவ பொது மனித வலு பணிப்பக பணிப்பாளர் நாயகமும் இராணுவ பயிற்சி கட்டளையின் தளபதியும் கெமுனு ஹேவா படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் சுராஜ் பங்சஜய அவர்களின் எண்ணக்கரு மற்றும் வழிக்காட்டலின் பேரில் ஒரு பழைய கட்டிடத்தை ஒரே நேரத்தில் மூன்று குடும்பங்கள் தங்கக்கூடிய வகையிலான விடுமுறை பங்களாவாக 1 ஆவது கெமுனு ஹேவா படையணி அபிவிருத்தி செய்துள்ளது. இது அதிகாரிகளின் நீண்டகால தேவையாக கணப்பட்டதுடன் இதன் கட்டுமானம் பூர்த்தி செய்யப்பட்டு சனிக்கிழமை (16) பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.

1 ஆவது கெமுனு ஹேவா படையணி கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் ஆர்.பி.சி.ஏ சமரநாயக்கவின் அழைப்பின் பேரில் மேஜர் ஜெனரல் சுராஜ் பங்சஜய அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.

இப் பழமை வாய்ந்த கட்டிடம் வரலாறு 18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் தொடங்குகின்றது. இக் கட்டிடம் அருட்த்திரு சாமுவேல் மற்றும் திருமதி லாங்டன் என்ற இரு வெஸ்லியன் மிஷனெரி தலைவர்களினால் ஒரு அனாதை இல்லமாகவும் ஒரு தொழிற்கல்வி பள்ளியாகவும் அமைத்திருந்தனர். 1899 இல் பிரிட்டன் போர் கைதிகளை கொழும்புக்கு அழைத்து வந்தது. பின்னர் 1900 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தியதலாவைக்கு கொண்டு சென்றனர். 1902 ம் ஆண்டு அப்போதய ஆளுநர் வெஸ்ட் ரிட்ஜ்வே என்பவரால் இதனை ஒரு இராணுவ முகாமாக மற்றுவதற்கு முடிவெடுக்கப்பட்டது. இந்த தியதலாவ முகாம் வளாகம் போர் கைதிகளை சிறைப்படுத்துவதற்கு பயன்படுத்தப்பட்டது.

முகாம் வளாகம் இரண்டு இராணுவ முகாம்களாக பிரிக்கப்பட்ட அவை இம்பீரியல் முகாம் மற்றும் ஊவா ரங்கலா முகாம் என பெயரிடப்பட்டன. இப் பெருமைமிகு படையணி உருவாக்குவதற்கு முன் இங்கு ரோயல் கடற்படை நிறுவப்பட்டிருந்தது. முதலாவது கெமுனு ஹேவா படையணி 1962 டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி ஊவா ரங்கலா முகாமில் நிறுவப்பட்டது. அந்தக் காலம் முதல் இக்கட்டிடம் யுஆர் 6 (ஊவா ரங்கலா) என் பெயரிடப்பட்டுள்ளது. இக் காலனித்துவ கட்டடம் முதலாவது கெமுனு ஹேவா படையணி அதிகாரிகளின் விவாகமானோர் குடியிருப்புகளாக பயன்படுத்தப்படுகின்றது. . Mysneakers | Nike Air Max 270