Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்கள்

logo logo logo

19th May 2020 19:02:56 Hours

தேசிய போர்வீரர்களின் நினைவு தினத்தில் மலர் அஞ்சலி செலுத்தல்

இராணுவம், கடற்படை, விமானப்படை, பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்புத் திணைக்கள வீரியம் மற்றும் துணிச்சல் மிக்க படையினர் தாய்நாட்டை காக்க தங்களின் விலைமதிப்பற்ற உயிர்களை தியாகம் செய்தனர். அவர்களின் நீங்காத நினைவுகளை இன்று பிற்பகல் தேசிய படை வீரர் தினத்தில் (19) பத்தரமுல்லை ஸ்ரீ ஜெயவர்த்தனபுர படைவீரர்கள் நினைவுத்தூபி வளாகத்தில் தேசியக் கொடிகள் மற்றும் இராணுவ சம்பிரதாயங்களோடு நினைவு கூறப்பட்டது.

11 வது தேசிய படை வீரர் தினத்தின் பிரதம அதிதியாக முப்படைகளின் சேனாதிபதி அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் கெளரவ பிரதமர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மேல் மாகாண ஆளுநர், ஜனாதிபதி செயலாளர், பாதுகாப்பு செயலாளர், பாதுகாப்புத் தலைமை பிரதானி மற்றும் இராணுவத் தளபதி, கடற்படை மற்றும் விமானப்படை தளபதிகள், பொலிஸ் மா அதிபர், ரணவீரு சேவா அதிகார சபை தலைவர் உள்ளிட்ட பிரமுகர்களுடன் உயிர் நீத்த படையினரின் நெருங்கிய உறவினர்கள், 30 ஆண்டுகளுக்கு மேலான எல்டீடீஈ யுத்தத்தில் பயங்கரவாதிகளிடமிருந்து 2009 நாட்டை மீட்பதற்காக போராடி இன்றைக்கு 11 வருடங்களுக்கு முன்னர் உயிர் நீத்த 28619 போர் வீரர்களுக்கு ஆழ்ந்த அஞ்சலியை செலுத்தினர்.

ரணவிரு சேவா அதிகார சபை பாதுகாப்பு அமைச்சுடன் இணைந்து ஏற்பாடு செய்த அஞ்சலி செலுத்தும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (19) ஆம் திகதி முப்படையினர், பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்புத் திணைக்கள உறுப்பினர்கள் உயிர் நீத்தவர்களின் குழந்தைகள், துணைவியர், உறவினர்கள், குடும்ப பிரதிநிதிகள் ஆகியோர் பங்குபற்றிருந்தனர். மே மாதத்தை பாதுகாப்பு அமைச்சு தேசிய படை வீரர் நினைவு மாதமாக அறிவித்தன் பின்னர், ஆண்டுதோறும் இந்த நிகழ்வை நாடு முழுவதும் நினைவுகூரப்படுகின்றது. இருப்பினும் இவ்வாண்டு சுகாதார கட்டுப்பாடுகள் காரணமாக முழுமையான அஞ்சலி நிகழ்வு இடம் பெறவில்லை..

மாலை 4.30 மணிக்கு அதிமேதகு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவர்களின் வருகை இடம் பெற்றதுடன், ஜனாதிபதியை ரணவிரு சேவா அதிகார சபை தலைவர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) நிசங்க சேனாதீர வரவேற்றார். அதனோடு படையினரால் மரியாதை செலுத்தப்பட்டதன் பின்னர் தாய்நாட்டின் பாதுகாப்பிற்காக மிக உயர்ந்த தியாகத்தை செய்த அனைத்து படையினரின் ஆத்மா சாந்திக்காக இரண்டு நிமிடம் மௌனஞ்சலி செலுத்தப்பட்டது. மகாசங்கத்தினர் மற்றும் ஏனைய சமயத் தலைவர்கள் , பாதிரியார்கள் மற்றும் மதகுருமார்கள் நிகழ்த்திய அனைத்து முக்கிய பிரிவுகளின் மத அனுசரிப்புகள், பின்னர் அனைத்து போர்வீரர்களின் நினைவாகவும், அனைத்து அவயங்களை இழந்த வீரர்களுக்கும் மற்றும் சேவை செய்பவர்களுக்கும் ஆசீர்வாதம் அளித்தன.மேலும் பண்டைய சிறப்பம்சமான பாரம்பரிய ரண பெரா தாளம், டிரம்மர்கள், ஹெவிசி, புரப்பட்டு, மகுல் பெர, கெட்ட பெர ஆகியன முப்படையினர் மற்றும் பொலிஸ் படையினரால் மரபுரிமை மற்றும் தைரியத்தை குறிக்கும் வகையில் உயிர் நீத்த போர் வீரர்களின் ஞாபகர்தமாக முன்வைக்கப்பட்டன.

ரணவிரு சேவா அதிகார சபையின் தலைவர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) நந்தன சேனாதீர அவர்கள் நினைவு விழாவைத் ஆரம்பித்து வைக்கும் முகமாக கெளரவ பிரதமர் மற்றும் அனைத்து அழைப்பாளர்களையும் சுருக்கமான தனது உரையில் வரவேற்றார். நிகழ்சியின் முதல் கட்டமாக தேசிய கீதம் பாடல், பௌத்த, கத்தோலிக்க, இந்து மற்றும் இஸ்லாமிய மத அனுஷ்டானங்கள் ஆகியன இடம்பெற்றன. பௌத்த மத தேரரான திவுல்கும்புரே விமலதம்ம அனு நாயக்க தேரரும் அவ்விடத்தில் கலந்து கொண்ட மத பிரமுகர்களில் ஒருவராவர்.

பின்னர் அங்கு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜனாதிபதியின் சொற்பொழிவானது இடம்பெற்றது. (அவரது உரையினை செய்தி சிறப்பம்சங்களில் பார்க்க). எல்.ரீ.ரீ.ஈ பயங்கரவாதத்தின் உச்சக்கட்டத்தின் பின்னர் அமைதியை வெற்றிகரமாக மீட்டெடுப்பதன் பின்னணியில் உள்ள முக்கிய உந்துசக்திகளில் ஒருவரான அதிமேதகு ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ அவர்கள் பாதுகாப்பு செயலாளராக சேவையாற்றிய வேளையில் போர்வீரர்களின் விலைமதிப்பற்ற மற்றும் அர்ப்பணிப்பு சேவைகளை நினைவு கூர்ந்தது மற்றும் அனைத்து இலங்கையர்களின் சமூகப் பொறுப்பாக அவற்றைக் கவனித்துக்கொள்வதன் முக்கியத்துவத்தை 2009 மே மாதத்திற்கு முன்னர் குறிப்பிட்டார்.

அதன்பிறகு, ஜனாதிபதி, பிரதமர், கடற்படையின் அட்மிரல் மேல் மாகாண ஆளுநர், ஜனாதிபதியின் செயலாளர், பாதுகாப்பு செயலாளர், பாதுகாப்புப் தலைமைப் பிரதானியும் மற்றும் இராணுவத் தளபதி, கடற்படை மற்றும் விமானப்படை தளபதிகள், பொலிஸ் மா அதிபர் மற்றும் ரணவிரு சேவா அதிகார சபையின் தலைவர் ஆகியோர் மலர் மாலை அஞ்சலி செலுத்துவதற்காக நினைவுத்தூபிக்கு சென்றனர் .

அடுத்து, நாட்டிற்காக உயிர் நீத்த முப்படை போர்வீரர்களின் உறவினர்கள் தங்கள் அன்புக்குரியவர்களின் நினைவாக அவர்களின் நினைவு தூபிக்கு மலர் அஞ்சலிகளை வைப்பதற்காக திருமதி லாலி கொபேகடுவ உற்பட நினைவுத்தூபிக்கு சென்றனர். இது துக்கம், வலி மற்றும் இழப்பு நிறைந்த ஒரு தருணம், ஆனால் உயிருள்ளவர்களுக்கு வணக்கத்தைப் பார்க்கவும் பெறவும் அவர்களின் நினைவகத்தை அழியாததாகத அற்புதமான நினைவுச்சின்னம் அற்புதமாக பிரகாசிக்கின்றது. அவர்கள் மலர்கள் அணிவித்து மற்றும் நினைவுச் சின்னத்தின் அடிவாரத்தில் அழுதுகொண்டே மண்டியிட்டு தங்கள் அன்புக்குரியவர்களின் நினைவுக்கு மரியாதை செலுத்தினர். அதே நேரத்தில் நினைவுச் சின்னத்தில் தூவப்பட்ட விமானப்படை வான்வழி மலர்கள் இந்த நிகழ்விற்கு மேலும் முக்கியத்துவத்தையும் வண்ணத்தையும் சேர்த்தது.

அடுத்து, இராணுவ முறைப்படி அவர்களின் நினைவகத்தை கௌரவிக்கும் கடைசி முலக்கம் ஒலித்தது. முப்படையினரின் டிரம்பட்டர்கள் மற்றும் பொலிசார் மெல்லிசை இசையில் இணைந்தனர்.மாலை வேளையில், மாபெரும் தேசிய நிகழ்வுக்கு உரிய அங்கீகாரத்தை அளிக்கும் ஒரு சிறப்பு கூட்டத்தில் முறையான விழாவின் நிறைவினை குறிக்கும் ரெவில்லே ஒலித்தது

கௌரவ அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், செயலாளர்கள், சிரேஷ்ட முப்படை மற்றும்பொலிஸ் அதிகாரிகள், இலங்கை இராணுவ தொண்டர் படையணித் தளபதியும் இராணுவ பதவி நிலை பிரதானியுமான மேஜர் ஜெனரல் சத்தியப்பிரிய லியானகே, முதன்மை பதவி நிலை அதிகாரிகள் , பணிப்பாளர்கள் , அதிகாரிகள் மற்றும் முப்படை, பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்புத் துறை சிரேஷ்ட அதிகாரிகள் இவ் விழாவில் கலந்து கொண்டனர்.

ஆண்டு தோறும், போர் வீரர்கள் தினமானது, ரணவிரு (போர் ஹீரோ) கொடி வெளியீடு, நினைவு முத்திரை வெளியீடு, மாகாண நினைவு நிகழ்வுகள் மற்றும் மெகா மத விழாக்கள், ஊக்கத் தொகை வழங்குதல், போர் வீரர்களின் குழந்தைகளுக்கு உதவித்தொகை, வீட்டு வசதிகள் போன்ற திட்டங்களுடன் இராணுவத் தளபதியின் அறிவுறுத்தலின் பேரில் கொண்டாடப்படுகின்றது.