Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

03rd April 2020 19:10:22 Hours

இராணுவ தொண்டர் படையணியின் 139 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு 1785 படையினர்களுக்கு பதவியுயர்வு

இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களது ஆசிர்வாதத்துடன் இராணுவ தொண்டர் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன அவர்களது தலைமையில் இம் மாதம் (1) ஆம் திகதி தொண்டர் படையணியின் 139 ஆவது ஆண்டு நிறைவு தலைமையகத்தில் இடம்பெற்றது. இதனை தொடர்ந்து இராணுவத்திலுள்ள தொண்டர் படையணியைச் சேர்ந்த 1785 படை வீரர்களுக்கு பதவியுயர்வு வழங்கி வைக்கப்பட்டன.

இந்த ஆண்டு நிறைவு விழாவானது நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் கோவிட் – 19 தொற்று நோய் நிமித்தம் தலைமையகத்தில் கொண்டாடப்படவில்லை.

இருந்த போதிலும் இராணுவ தொண்டர் படையணியின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன அவர்கள் இந்த ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு தலைமையக வளாகத்தினுள் மனிதாபிமான நடவடிக்கைகளில் பயண்படுத்திய கௌவசவானகமொன்றையும் தலைமையக நுழைவாயிலில் நிறுத்தி வைத்து திறந்து வைத்தார். அத்துடன் தலைமையக வாளகத்தினுள் மரநடுகைகளையும் மேற்கொண்டார்.

இந்த தொண்டர் படையணியானது ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதி 2 ஆவது“சிலோன் காலாட் படையணி” ஆக ஆரம்பிக்கப்பட்டது. தற்போது இந்த இராணுவ தொண்டர் படையணியில் 82 படையணிகள் ஸ்தாபிக்கப்பட்டு முழுமையாக 55000 அங்கத்தவர்கள் தற்போது சேவையில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் இந்த தொண்டர் படையணியானது மனிதாபிமான நடவடிக்கைகள் பணிகளில் பாரிய பங்களிப்பை வழங்கியுள்ளது .

தொண்டர் படையணியின் கட்டளை தளபதி 139 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இராணுவத்தினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் தொண்டர் படையணியின் பிரதி கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் கெலும் நுகேகொட மற்றும் இராணுவ மூத்த அதிகாரிகள் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Authentic Nike Sneakers | Nike Shoes