Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

01st April 2020 19:48:30 Hours

மலேசியாவிலிருந்து வந்தவர்கள் தாமதமின்றி தங்களதுபதிவுகளை மேற்கொள்ளுமாறு இராணுவ தளபதி தெரிவிப்பு

ராஜகிரியவிலுள்ளகோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும், பாதுகாப்புப் தலைமை பிரதானியும் , இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும்சட்ட வழக்கறிஞரும்,பிரதி பொலிஸ் மாஅதிபருமாகிய அஜித் ரோகன அவர்களது தலைமையில் இன்று (1) ஆம் திகதி பகல் ஊடக சந்திப்பு மகாநாடு இடம்பெற்றது.

இந்த ஊடக சந்திப்பின் போது இராணுவ தளபதியவர்கள் கருத்து தெரிவிக்கையில்இரண்டு வார கால தனிமைப்படுத்தப்பட்ட செயல்முறைக்குப் பின்பு மொத்தம் 96 பேர் அதாவதுதம்மினாவிலிருந்து 86 பேரும், தியதலவையிலிருந்து10 பேரும், தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களிலிருந்து பரிசோதனைகளின் பின்பு தரமான சான்றிதழ்களுடன் தங்களது வீடுகளுக்கு இன்று (1) ஆம திகதி அனுப்பி வைக்கப்பட்டனர்.இது வரைக்கும் இந்த தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் முப்படையினரது பராமரிப்பின் கீழ் இருந்த மொத்தமாக2118 பேர்கள் இந்த மையங்களிலிருந்து வெளியேறியுள்ளனர். அதேபோல், கோவிட் -19 நேர்மறை பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பு கொண்டதாக சந்தேகிக்கப்படும் மொத்தம் 42 நபர்கள், கலுபோவில, ஆன்டியம்பளம், தன்கொடுவ,பெரியமுல்ல, கொச்சிக்கடை மற்றும் பொருதோட்ட ஆகிய பிரதேசங்களிலிருந்து நேற்று 31 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை புனானையிலுள்ள பனிச்சங்கேனி தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதேபோல், நீர்கொழும்பு மருத்துவமனையில் இருந்து இறந்து போனவரது தாக்கத்திற்கு உள்ளாகியிருப்பார்களோ எனும் நோக்கத்துடன் அந்த வைத்தியசாலையைச் சேர்ந்த 24 சேவையாளர்கள் 14 நாட்கள் வைக்கல ஹோட்டலில் தனிமைப்படுத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எமது இலங்கையின் பல பகுதிகளில் அமைந்துள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையங்களிலில் 33 நாடுகளிலிருந்து வரப்பட்ட நபர்கள்14 நாட்கள் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளில் 1794 நபர்கள் தங்கியிருந்து பரிசோதனைகளை மேற்கொள்கின்றனர். இவர்களில் 8 பேர் வெளிநாட்டவர்களாவர். அத்துடன் நாளைய தினம் (2) ஆம் திகதி இந்த தனிமைப்படுத்தப்பட்ட மையங்களிலுள்ள 195 பேர் தங்களது பூரன பரிசோதனைகளின் பின்பு தங்களது வீடுகளுக்கு செல்லவுள்ளனர் என்று இராணுவ தளபதி தெரிவித்தார்.

"நேற்று 21 பேர் கொரோனா நோயாளிகள் இணங்கானப்பட்டதை முன்னிட்டு எமது நாட்டு மக்கள் பயமடைந்தனர். வெளிநாட்டிலிருந்து வந்திருந்து, தங்களதுகிராமத்திலுள்ள மக்களுடன் தொடர்பு கொண்டிருந்ததை அவதானித்ததன் காரணத்தினால்மேன்மை தங்கிய ஜனாதிபதி மற்றும் பிரதமரது அறிவுறுத்தலின் பிரகாரம்சந்தேகத்திற்கிடமான 68 கிராமவாசிகள் புத்தளத்திலுள்ள சஹிரா கல்லூரியில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படும் நடவடிக்கையின் கீழ் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும் அவர்களில் 10 பேர் அதாவது7 ஆண்களும் 3 பெண்களும் கொரோனா தொற்று நோய்க்கு இலக்காகியுள்ளவர்கள் என இணங்கண்டு மேலதிக சிகிச்சைக்காக இன்று (1) ஆம் திகதிகாலை இராணுவ மேற்பார்வையின் கீழ் முல்லேரியாவிலுள்ள உள்ள ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டனர். ஆகையால் இன்றைய எண்ணிக்கையின் படி மேலும் 10 ஆக உயர்ந்துள்ளது என்று இராணுவ தளபதி சுட்டிக்காட்டினார்.

முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சிறப்பு விடயமாக கவனம் செலுத்திய இராணுவ தளபதியவர்கள்புத்தளம் பகுதியில் இருந்து கண்டறியப்பட்ட நபர்களின் விசாரனைகளின் போது2020 மார்ச் 17 ஆம் திகதிஅன்று மலேசிய ஏர்லைன்ஸின் OD 185 விமானமானது இலங்கைக்கு 36 பயணிகளுடன் வந்தடைந்தது இதில்4 வெளிநாட்டவர்களும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

“அந்த விமானத்தில் இருந்த 37 பயணிகளில், புத்தளம் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் கொரோனோ நோய்க்கு பாதிப்புட்டவராக கண்டறியப்பட்டார். மற்றைய 36 பேரும் இதுவரை பொலிஸாரிடம் பதிவாகவில்லை ஆகையால் தயவு செய்து மற்றவர்களும் உங்களை சுகாதார அதிகாரிகளோடு தொடர்பு கொண்டு உங்களது விபரங்களை தெரிவித்து தனிமைப்படுத்தப்பட்ட மையங்களிலிருந்து இந்த நோயிலிருந்து விடுவிப்பதற்காக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு எமக்கு ஒத்துழைப்பை வழங்கி வைக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம். என்று இராணுவ தளபதி தெரிவித்தார்.

"கடந்த சில நாட்களில், பண்டாரகம, அளுத்கம, அக்குரன மற்றும் புத்தளம் கடயான்குளம் பிரதேசங்களிலிருந்து 3 பேர் அகுரனையிலிருந்து 3 பேரும், புத்தளத்திலிருந்து 10 பேரும் பேருவளையிலிருந்து 6 பேரும் கொரோனா தொற்று நோய்க்கு பாதிப்புள்ளானவர்கள் என்று இனங்காணப்பட்டனர் என்று இராணுவ தளபதி சுட்டிக்காட்டினார்.

இந்த நாட்டின் மூத்த குடிமக்களாக இருக்கும் ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியம் பெற வசதியாக, முப்படையினர் இப்போது 2020 ஏப்ரல் 2-3, ஆம் திகதிகளில்ஊரடங்கு நேரத்தில் தங்கள் வீடுகளில் இருந்து தங்கள் வங்கிகளுக்கு அழைத்துச் செல்ல பாதுகாப்பு படையினர் போக்குவரத்து சேவையை வழங்கவுள்ளனர். முப்படையினர்மற்றும் கிராமசேவக உத்தியோகத்தர்களின் உதவியுடன் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்று இராணுவ தளபதி தெரிவித்தார்.

2020 மார்ச் 16 முதல் 19 ஆம் திகதிவரை இலங்கைக்கு வந்த மொத்தம் 2913 பேர்களில் ,விமான நிலையம் மூடப்பட்ட நாள் தொடக்கம்எங்கள் முறையீடுகளுக்கு பதிலளிக்கும் விதமாக சுய தனிமைப்படுத்தலைத் தேர்ந்தெடுத்ததாக பிரதி பொலிஸ் மாஅதிபரும்சட்ட வழக்கறிஞருமான அஜித் ரோஹனஅவர்கள் ஊடகங்களுக்கு தெரிவித்தார். , இது பாராட்டுக்குரிய விஷயம். இதேபோல், எதிர்காலத்தில்பொலிஸாரிடம் பதிவு செய்யத் தவறியவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட சட்டம் மற்றும் குற்றவியல் சட்டத்தின்படி கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்.பொலிஸ் தலைமையகத்தால் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் இன்று வெளியிடப்பட்ட விஷேட அறிக்கையின் மூலம் நாடாளவியல் ரீதியாக இந்த சட்ட திட்டங்களை மீறுவோருக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வழங்கு தாக்கல் செய்யப்படுவதாக பிரதி பொலிஸ் மாஅதிபர் ஊடகங்களுக்கு தெரிவித்தார். Nike footwear | 【発売情報】 近日発売予定のナイキストア オンライン リストックまとめ - スニーカーウォーズ