Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

26th March 2020 13:15:45 Hours

சமூக ஊடக ஆர்வலர்கள் கோவிட்-19 வைரஸ் தடுப்பு நடவடிக்கைளுக்கு ஒத்துழைப்பு

அஷான் ஒன்லைன், நவா, எவ லவிங், ஜானை-பிரியா,வொஸ்டி,ஸ்டூடியோ ரட்ட,விகடம,ட்ரவல் வித் வைப், சூட்டி மல்லி, மற்றும் பொடி மல்லி போன்ற பிரபல்யமான சமூக ஊடக ஆர்வலர்கள் அவர்களுடைய ஒத்துழைப்பினை அவர்களின் கலைத் திறன்களின் மூலம் அரசின் வைரஸ் தடுப்பு நடவடிக்கைளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக, ராஜகிரியவில் உள்ள கோவிட்-19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தில் இராணுவ பேச்சாளரும் இலங்கை இராணுவ ஊடக பணிப்பாளருமான பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க அவர்களுடன் புதன் கிழமை 25 ஆம் திகதி இடம்பெற்ற சந்திப்பின்போது தெரிவித்தனர்.

தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கு தங்கள் முழு ஆதரவை வழங்குவதாக அவர்கள் அனைவரும் உறுதிப்படுத்தியதோடு தனிப்பட்ட மற்றும் பொது சுகாதாரம், கூட்டு சமூக பொறுப்புகள், பரிமாற்ற முறைகள், சுய தனிமைப்படுத்தும் நுட்பங்கள், வீட்டு பழக்கவழக்கங்கள் சுகாதார வழிகாட்டுதல்கள், சமூக தூரத்தின் முக்கியத்துவம் போன்றவை ஊக்குவிப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த அவர்களின் அனைத்து ஆக்கபூர்வமான தயாரிப்புகளையும் வழங்குவதாக உறுதியளித்தனர். அவர்கள் படையினர் , மருத்துவ நிபுணர்கள், சுகாதார அதிகாரிகள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் உள்ள ஊழியர்களின் பங்கு மற்றும் பணிகளைப் பற்றி எடுத்துரைத்த்துடன் இச்சந்திப்பின் போது தங்கள் மனமாந்த நன்றியைத் தெரிவித்தனர்.

பிரிகேடியர் விக்ரமசிங்க அவர்கள் நாட்டின் இக்கட்டான் சூழ்நிலையில் அவர்களினால் எடுத்த முயற்சிக்கு தனது நன்றியினை தெரிவித்துக் கொண்டதுடன் அவர்களின் எதிர்கால வெற்றிக்கான தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.Authentic Sneakers | nike air jordan lebron 11 blue eyes black people