Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

25th March 2020 18:25:14 Hours

வன்னி படையினரால் சம்பத்நுவர,பதவிய மற்றும் பராக்கிரமபுர நகரங்களில் கிருமி நீக்கம்

கோவிட்-19 வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் முகமாக வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 62 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் எத்தவெடுநுவவெவவில் அமைந்துள்ள 14 ஆவது இலங்கை இலேசாயுத காலாட் படையணியினரால் சம்பத்நுவர நகரப்புரங்களானது தங்கட் கிழமை 23 ஆம் திகதி சம்பத்நுவர மருத்துவ சுகாதார அலுவலகத்தின் உதவியுடன் ஊரடங்கு சட்டம் அமுலின் போது வைரஸ் அழிப்பு மற்றும் பக்டீரியா கிருமி நாசினிகளை பயன்படுத்தி துப்பரவுசெய்யப்பட்டன.

இந்நிகழ்சி திட்டத்தின் மூலம் சம்பத்நுவர பிரதேச செயலகம், மஹாவெலி எல் வலய அலுவலகம், சம்பத்நுவர வைத்தியசாலை,பேருந்து தரிப்பிடம், இலங்கை வங்கி வளாகம் மற்றும் ஏடிஎம் இயந்திரம் ஆகிய இடங்களில் கிருமி நீக்க வேளைகள் இடம்பெற்றன. 14 ஆவது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் கட்டளை அதிகாரி மற்றும் படையினர் 5 ஸ்ப்ரே இயந்திரங்களுடன் சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து இவ்வேளைத் திட்டத்தினை நடாத்தினர்.

அதேவேளை, 17 ஆவது இலங்கை தேசிய பாதுகாப்பு படையினரால் கிருமி நீக்க நிகழ்சித்திட்டமானது சுகாதார அதிகாரிகளின் உதவியுடன் பதவிய ஆதார வைத்தியசாலையில் செவ்வாய்க் கிழமை 24 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்டது.

பதவிய வைத்தியசாலை, அரச வங்கிகள் மற்றும் ஏடிஎம் இயந்திரம் உள்ளிட்ட பதவிய மற்றும் பராக்கிரமபுர நகரப்புர பகுதியில் கிருமி நிக்கப் பணிகள் இடம்பெற்றன. 17 ஆவது இலங்கை தேசிய பாதுகாப்பு படையின் கட்டளை அதிகாரி, பதவிய மருத்துவ சுகாதார அலுவலகம்,பொதுச் சுகாதார பரிசோதகர்கள், பதவிய பொலிஸ் பொறுப்பதிகாரி, படையினர்,பொலிசார்,கல்குலம சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் கட்டளை அதிகாரி உட்பட 10 உறுப்பினர்கள், 10 வைத்தியசாலை ஊளியர்கள் உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்சித் திட்டத்திட்காக 10 ஸ்ப்ரே இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.buy footwear | Air Max