Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

14th November 2019 22:32:08 Hours

அமைதி காக்கும் பணிகளுக்காக இலங்கை இராணுவம் மாலி பயணம்

மாலியில் (மினுஸ்மா) ஐக்கிய நாடுகள் சபையின் பல பரிமாண ஒருங்கிணைந்த உறுதிப்படுத்தல் மிஷனில் பணியாற்றவுள்ள இலங்கை இராணுவத்தின் கம்ட் கான்வே நிறுவனத்தின் (சி.சி.சி) 243 இராணுவ வீரர்களின் புதிய அணியானது (13) ஆம் திகதி இலங்கையிலிருந்து அமைதி காக்கும் பணிகளுக்காக நாட்டை விட்டு வெளியேறியது.

இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் இராணுவ உயரதிகாரிகள் விமான நிலையத்திற்கு சென்று அமைதி காக்கும் பணிகளுக்காக செல்லவிருந்த 13 இராணுவ படையணிகளைச் சேர்ந்த 13 இராணுவ அதிகாரிகள் மற்றும் 223 இராணுவ படை வீரர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வழியனுப்பி வைத்தனர்.

மாலிக்கு அமைதி காக்கும் பணிகளின் கட்டளை அதிகாரியாக லெப்டினன்ட் கேர்ணல் P.G.C.S காலகே அவர்களும், இரண்டாம் கட்டளை அதிகாரியாக மேஜர் ஜெனரல் N.V.A.M விதானகே அவர்களது தலைமையில் இந்த அணியினர் மாலிக்கு சென்றனர்.

இந்த அணியினர் இம் மாதம் 6 ஆம் திகதி போயகன விஜயபாகு காலாட் படைத் தலைமையகத்தில் வைத்து இராணுவ தளபதி அவர்களுக்கு இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகளை வழங்கி வைத்து கௌரவித்தனர்.

மாலி செல்லவுள்ள இராணுவ அணிகளில் விஜயபாகு காலாட் படையணி, இலங்கை தேசிய பாதுகாப்பு படையணி, படைக்கலச் சிறப்பணி, பொறியியல் படையணி, இலங்கை சமிக்ஞை படையணி, இலங்கை சிங்கப் படையணி, பொறிமுறை காலாட் படையணி, பொறியியல் சேவைப் படையணி, இராணுவ சேவைப் படையணி, இலங்கை போர்கருவி படையணி, மின்சார பொறிமுறை காலாட் படையணி, இராணுவ பொலிஸ் படையணி மற்றும் இராணுவ மருத்துவ படையணியைச் சேர்ந்த இராணுவ அங்கத்தவர்கள் பங்கேற்றுக் கொண்டனர்.

43 அமைதி காக்கும் குழுவினர் முன்னதாக புறப்பட்டதுடன் எஞ்சிய 200 பேர் நவம்பர் 12 ஆம் திகதி மாலை புறப்பட்டனர். இதேபோல், ஏற்கனவே மாலிக்கு அமைதி காக்கும் பணிகளுக்காக சென்ற முதலாம் கட்ட இராணுவ வீரர்கள் இம் மாதம் (14) ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளனர்.

மாலிக்கு சென்ற இராணுவ வீரர்களை வழியனுப்பி வைப்பதற்காக இராணுவ தளபதியுடன் இராணுவ பொது நிர்வாக பிரதானி மேஜர் ஜெனரல் ரோகித தர்மசிறி, விஜயபாகு காலாட் படையணியின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் R.K.B.S கெடகும்புர, இராணுவ வெளிநாட்டு செயல்பாட்டு பணிப்பாளர் பிரிகேடியர் பிரதாப் திலகரத்ன அவர்கள் இணைந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். buy footwear | Best Selling Air Jordan 1 Mid Light Smoke Grey For Sale 554724-092