Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

13th September 2019 23:43:16 Hours

கொழும்பில் இடம்பெற்ற மிஷன் 17 'நீர்க்காக கூட்டுப்பயிற்சி ' போலி நடவடிக்கை

7-12 பயங்கரவாதிகள் அடங்கிய குழு 2019 செப்டம்பர் 13 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொழும்பு மத்திய வங்கி கட்டிட வளாகத்திற்குள் ஊடுருவியுள்ளதாகவும் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் இதன் மூலம் பல பொதுமக்கள் காயப்பட;டு பலர் இறந்துள்ளதை உளவுத்துறை உறுதிப்படுத்தியதை அடுத்து, தற்போது நடைபெற்று வரும் மிஷன் 17 'நீர்க்காக கூட்டுப்பயிற்சி ' போலி நடவடிக்கையின் கூட்டுப்படையினர் கொழும்பை சென்றடைந்தனர்.

மேலும் குறித்த பயங்கரவாதிகள், டி - 56 மற்றும் மாற்றியமைக்கப்பட்ட பதிப்புகள், எல்எம்ஜிக்கள், கைத்துப்பாக்கிகள், கைகுண்டுகள், துப்பாக்கி சுடும் ஆயுதங்கள் மற்றும் ஐ.இ.டி. போன்ற ஆயுதங்கள் மூலம் பயணக்கைதிகளை வைத்துக் கொண்டு 100000.00 அமெரிக்க டொலர்களை கோரியிருந்த நிலையில், சிறந்த நன்கு ஒருங்கிணைந்த பாதுகாப்பு நடவடிக்கைகளினால் பணயக்கைதிகளை விடுவித்து பயங்கரவாதிகள் கொள்ளப்பட்டனர். நகர்ப்புற சண்டையில் வல்லமை வாய்ந்த சிறப்புப் படைகள் பணிப்பாளருடன் சேர்ந்து கட்டிடத்திற்குள் சிக்கிய வங்கித் தொழிலாளர்களை மீட்பதற்கான நடவடிக்கையில் இறங்கின.

அதனைத் தொடர்ந்து மேலதிகமான ஒரு படையினர் குழுவுடன் 6 எட்டு பேர் கொண்ட அணிகள் மற்றும் மற்றொரு எட்டு பேர் கொண்ட குழு இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டு, அனைத்து வங்கி ஊழியர்களையும் கட்டிடத்தையும் மீட்டனர். பெல் 212 ஹெலிகாப்டரில் இருந்து படைவீரர்கள் கீழே உள்ள படைவீரர்களுக்கு ஒட்டுமொத்த பாதுகாப்பையும் அளித்தனர்.

மேலும் இந்நிகழ்வை இராணுவத் தலைமையகத்தின் உடற்பயிற்சி பணிப்பாளர் மற்றும் செயல்பாட்டு பணிப்பாளர் உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் இந்தப் பயிற்சியைக் கண்டுகளித்தனர்.Adidas shoes | SUPREME , Fullress , スニーカー発売日 抽選情報 ニュースを掲載!ナイキ ジョーダン ダンク シュプリーム SUPREME 等のファッション情報を配信! - パート 5