Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

13th September 2019 21:30:41 Hours

பொதுமக்களுக்கான மரக்கன்றுகள் வழங்கிவைப்பு

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜி.வி. ரவிப்பிரிய மற்றும் 65ஆவது படைப்பிரிவின் படைத்தளபதி அவர்களின் வழிகாட்டுதலுக்கமைய‘ ஹடபிம சபை’இன்ஒருங்கிணைப்புடன்652ஆவது படைத் தலைமையக படையினரினால் 2000 திற்கும் அதிகமான மா பலா முந்திரி மரக்கன்றுகளானது 65ஆவது படைப்பிரிவின் பிரதேசத்தில் வசிக்கும் 300 பொதுமக்களுக்கு கடந்த திங்கழன்று (9) வழங்கி வைத்தனர்.

ஹடபிம சபையின் தவிசாளர் திரு பலிந்த சாகர அவர்களின் முழுமையான ஒத்துழைப்புடன் இம்மரக்கன்றுகள் வழங்கிவைக்கப்பட்டன.652ஆவது படைத் தலைமைய படையினரால் இந் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டதோடு, கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகம் மற்றும் 65ஆவது பாதுகாப்பு படைப்பிரிவில் சேவையாற்றும் பல சிரேஷ்ட அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

அதேவேலை பூநேரின் பிதேச 120 பொதுமக்களுக்கான மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வானது அன்றய நாள் மதியம் அரசபுரகுளத்தில் இடம்பெற்றது. 66ஆவது காலாட் படைப்பிரிவின் படைத்தளபதி பிரகேடியர் மங்கள விஜயசுந்தர அவர்களின் வழிகாட்டுதலுக்கமைய 661ஆவது காலாட் படைத் தலைமையகத்தின் கட்டளைத் தளபதி கேணல் மதுர விக்ரமரத்ன அவர்களினால் பூநேரின் பிரதேசத்தில் இக்குறித்த மரக்கன்றுகள் வழங்கிவைக்கப்பட்டன.

200 மா மரக்கன்றுகள்,910 முந்திரி மரக்கன்றுகள், மற்றும் 1150 பலா மரக்கன்றுகள் ஆகியன நீண்ட காலத்தில் சூழல் பாதுகாப்பு மற்றும் பொருளாதார வருமானத்தை அடிப்படையாகக் கொண்டு பொதுமக்கள் மத்தியில் ஆர்வத்தினை ஏற்படுத்தும் முகமாக வழங்கி வைக்கப்பட்டன.

மேலும் இந்நிகழ்வானது,66ஆவது காலாட் படைப்பிரிவின் படைத்தளபதி பிரகேடியர் மங்கள விஜயசுந்தர, ஹடபிம சபையின் தவிசாளர் திரு பலிந்த சாகர, படைத் தலைமையக கட்டளைத் தளபதிகள், சிரேஷ்ட அதிகாரிகள், கட்டளை அதிகாரிகள் படையினர் மற்றும் பெருமளவான பொதுமக்கள் உள்ளிட்ட பலரின் பங்களிப்புடன் அரசபுரகுள படை பயிற்சி பாடசாலையில் வைத்து இடம்பெற்றது. Best Authentic Sneakers | Women's Nike Superrep