Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

06th September 2019 15:41:11 Hours

ஒட்டுசுட்டான் பாடசாலையின் 147 மாணவர்களுக்கு நன்கொடை

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 64 ஆவது படைப் பிரிவு தலைமையகத்தின் 643 ஆவது படைப் பிரிவில் அமைந்திருக்கும் 13 ஆவது இலங்கை இராணுவ தேசிய பாதுகாப்பு படையினரின் ஒழுங்கமைப்பில், ஒட்டுசுட்டான் கருப்பதமுரிப்பு பொது பிரதேசத்தில் குறைந்த வருமானத்தில் வசிக்கும் 147 ஏழை மாணவர்களுக்கு பாடசாலை காலணிகள் நன்கொடை வழங்கும் நிகழ்வானது 2019 செப்டெம்பர் 04 ஆம் திகதி புதன்கிழமை இடம் பெற்றது.

இந்த நன்கொடையானது இராணுவத்தினரின் வேண்டுகோளின் பேரில் தொழிலதிபரான திரு சரித் விமலவீர அவர்களால் நிதியுதவி வழங்கப்பட்டது.

அதன்படி கருப்பதமுரிப்பு பாடசாலை வளாகத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட நிகழ்வின் போது 147 பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை காலணிகள் வழங்கப்பட்டன.

இந்த நன்கொடை வழங்கும் நிகழ்வானது 64 ஆவது படைப் பிரிவின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் W.D.C.K கொஸ்தா, 643 படைப் பிரிவின் கட்டளை தளபதி மற்றும்; 13 ஆவது இலங்கை இராணுவ தேசிய பாதுகாப்பு படையணியின் கட்டளை தளபதியின் வழிகாட்டல் மற்றும் மேற்பார்வையின் கீழ் இடம் பெற்றது. Adidas shoes | Nike Air Max 270