Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

06th September 2019 15:41:11 Hours

வெலிகம கடற்கரையோரங்களில் படையினர் சுத்திகரிப்பு பணிகளில் ஈடுபாடு

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 58, 581 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் சுத்திகரிப்பு வேலைத் திட்டத்தின் கீழ் 3, 14 கெமுனு ஹேவா படையணியினரது பங்களிப்புடன் வெலிகம கடற்கரை பகுதிகளில் இம் மாதம் (5) ஆம் திகதி சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

மேலும் இந்த சிரமதான பணிகள் வெலிகம பிரதேச செயலகம், பிரதேச சபை, நகராட்சி மன்றத்தின் ஊழியர்கள் மற்றும் மிரிஷ்ச கடலோர பாதுகாப்பு திணைக்கள படையினர்களின் பங்களிப்புடன் இடம்பெற்றது.

மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த முதலிகே அவர்களது வழிக்காட்டலின் கீழ் 58 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜயந்த குணரத்ன அவர்களது கண்காணிப்பின் கீழ் 581 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி பிரிகேடியர் மனோஜ் லமாஹேவ அவர்களது தலைமையில் 135 இராணுவ படை வீரர்களது பங்களிப்புடன் இந்த சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. Nike Sneakers | Nike Shoes