Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

12th August 2019 23:18:24 Hours

தியதலாவில் 2 ஆவது தடவையாக “குதிரை காட்ச்சி”

இலங்கை குதிரையேற்றம் சங்கதுடன் இணைந்து இலங்கை இராணுவ அகடமி ஏற்பாடுசெய்யப்பட்ட 2017க்கான குதிரையேற்ற கண்காட்சியானது கடந்த (11) ஆம் ஞாயிற்றுக்கிழமை தியதலாவை இலங்கை இராணுவ அகடமி பொலோ விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது.

இந்த நிகழ்விற்கு இலங்கை இராணுவ அகடமி மற்றும் இலங்கை குதிரையேற்றம் சங்கத்தினரின் அழைப்பை ஏற்று பிரதான அதிதியாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் அவர்கள் கலந்து கொண்டார்.

இராணுவ குதிரைகளுடன் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் இலங்கை குதிரையேற்றம் சங்கத்தின் 4 பிரிவுகளின் கீழ் நடத்தப்பட்டது, அதாவது - ஷோ ஜம்பிங், டென்ட் பெக்கிங், பீப்பாய் ரேசிங் மற்றும் என்டர் டிரைவிங் ஆகியவை பார்வையாளர்களை மிகவும் உட்சாக படுத்தின. அவர்களில் பெரும்பாலோர் வேவ்வேறு பிரதேசங்களில் இருந்து வருகை தந்தவர்கள்.இந்த நிகழ்விற்கு இலங்கை குதிரையேற்றம் சங்கத்தின் தலைவர் சுரஞ்ஜித் பிரேமதாச மற்றும் இலங்கை இராணுவ அகடமியின் தளபதி ஆகியோர் பிரதம அதிதிகளை வரவேற்றதுடன் அதில் சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்து கொண்டன.

இந்த குதிரையேற்ற விளையாட்டhனது என்பது பெரும்பாலும் பண்டைய இராணுவ குதிரைப்படை பயிற்சி முறைகளை அடிப்படையாகக் கொண்டதுடன் இது போர்க்களத்திலோ அல்லது வேறு இடங்களிலோ குதிரைகளை சிறப்பாகச் செயல்படுத்த உதவுகிறது. இலங்கையில் குதிரைச்சவாரிகள் பெருகி வருகின்றனர் போதிலும் மேலும் இலங்கை குதிரையேற்றம் சங்கதின் குதிரை சவாரி செய்பவர்களின் அதிக வெளிப்பாடு கிடைக்க அதன் வருடாந்த நாட்காட்டியில் கூடுதல் நிகழ்வுகளைச் சேர்க்க எதிர்பார்க்கிறது.

இலங்கை குதிரையேற்றம் சங்கதினரின் குதிரையேற்ற விழா 2019 க்கான ஏற்பாடு செய்வதன் மூலம் இலங்கையில் குதிரைச்சவாரி விளையாட்டுகளை நாட்டின் பிற விளையாட்டுத் துறைகளுக்கு இணையாக உயரத்திற்கு கொண்டு செல்வதற்கான அர்ப்பணிப்பு உறுதிப்பாடு மற்றும் ஒழுக்கத்தை வெளிப்படுத்தியுள்ளது.

இலங்கையில் முதன்முதலில் நடைபெற்ற இந்த குதிரை போட்டியானது தியதலாவா இராணுவ இலங்கை இராணுவ அகடமியின் குதிரையேற்ற வீரர்களால் தங்கள் குதிரைகளுக்கு பயிற்சி அளித்து மகத்தான வேலை செய்துள்ளனர். ஷோ ஜம்பிங் மற்றும் பிற குதிரையேற்ற விளையாட்டு நடவடிக்கைகளுக்காக தங்கள் பொது சவாரி குதிரைகளுக்கு பயிற்சி அளிக்க குதிரைப்படை அடிப்படையிலான பயிற்சி முறைகளைப் பயன்படுத்தினர்.

இலங்கை குதிரையேற்ற சங்கம் மற்றும் இலங்கை இராணுவ அகடமி ஆகியவை அதன் வரலாற்றில் முதல்முறையாக, இந்த குதிரைக் காட்சியை இலங்கை இராணுவ அகாடமி போலோ மைதான வளாகத்தில் 2018 இல் நடத்தியது என்பது குறிப்பிடதக்க விடயமாகும். bridgemedia | New Releases Nike