Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

10th August 2019 22:58:22 Hours

பாதுகாப்பு செயலாளர் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு விஜயம்

பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் (ஓயவூ) சாந்த கோட்டேகொட அவர்கள் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு (10) ஆம் திகதி சனிக்கிழமை விஜயத்தை மேற்கொண்டு முப் படையினர் மற்றும் பொலிஸாருடன் கரந்துரையாடலை மேற் கொண்டார்.

இவ் வளாகத்திற்கு வருகை தந்த பாதுகாப்பு செயலாளர், இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்கவுடன் 3 ஆவது இயந்திர காலாட்படை படைப்பிரிவின் படையினர்களை கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் அருணா ஜெயசேகர அவர்களால் வரவேற்றார்.

அதைத் தொடர்ந்து, இராணுவத் தளபதி அவர்கள் கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மற்றும் பலருடன் இப்பகுதியில் தற்போதுள்ள பாதுகாப்புக் தொடர்பான விடயங்கள் மற்றும் இராணுவத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கிழக்கு மாகணத்தில் சேவை செய்கின்ற கடற்படை, விமானப்படை மற்றும் காவல்துறை உட்பட 350 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மத்தியில் உரையாற்றினார். அதில் அவர் பாதுகாப்புப் பணியாளர்களின் அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டியதுடன் 21/4 சம்பவத்திற்குப் பின்னர் பிராந்தியத்தில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பை உறுதி செய்யும் இயல்புநிலையை மீண்டும் கொண்டுவருவதற்கான அவர்களின் பங்களிப்பு தொடர்பாகவும் கலந்துரையாடினார்.

ஆதனைத் தொடர்ந்து பாதுகாப்பு செயலாளர் இராணுவத் தளபதி மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளுடன் சேர்ந்து மட்டக்களப்பில் அமைந்துள்ள சியோன் தேவாலயத்திற்கு விஜயம் செய்தார். அத்துடன் அதன் கட்டுமானத் தளத்தின் பொறுப்பான 3 ஆவது பொறியாளர் சேவை படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேணல் நந்திகா அபேசேகர அவர்களை சந்தித்து கட்டுமானத்தின் தற்போதைய நிலை மற்றும் அத்தகைய பணிகள் எவ்வாறு மேற்கொள்ளப்படுகின்றன என்பது குறித்து வருகை தந்த பாதுகாப்பு செயலாளருக்கு விளக்கினார். படையினர்களின் முன்னேற்ற செயற்பாட்டை பாரவையிட்டு சீக்கிரம் பிரார்த்தனை சேவைகளை மீண்டும் தொடங்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.spy offers | Nike Shoes