Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

படையினர்களுக்கிடையில் இடம்பெற்ற ஸ்குவஷ் சம்பியன்ஷிப் போட்டி

படையினர்களுக்கிடையில் விளையாட்டுத் திறனை விருத்தி செய்யுமுகமாக, வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஸ்குவஷ் சம்பியன்ஷிப் போட்டியானது, கடந்த திங்கட் கிழமை (5) ஆம் திகதி வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக ஸ்குவஷ் விளையாட்டு மைதனத்தில் இடம்பெற்றது.

மேலும் இப் போட்டியானது 56 ஆவது படைப்பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பூரக செனவிரத்ன அவர்களின் மேற்பார்வையின் கீழ் 561 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளைத் தளபதி கேணல் பிரியந்த ரத்நாயக்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டது.

21, 54, 56, 61 மற்றும் 62 ஆவது படைப்பிரிவுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் இப் போட்டியில் கலந்து கொண்டதோடு,இப்போட்டியின் சம்பியனாக 21 ஆவது படைப் பிரிவின் கீழுள்ள 2விஜயபாகு காலாட் படையணியைச் சேர்ந்த கோப்ரல் டி.எம்.எஸ்.ஜயகொடி தெரிவுசெய்யப்பட்டதுடன், 62 ஆவது படைப் பிரிவின் கீழுள்ள 9கஜபா படையணியைச்சேர்ந்த எஸ்.எம்.டி.எஸ்.சந்தநாயக்க இரண்டாம் இடத்தை சுவீகரித்துக் கொண்டார்.

போட்டி நிகழ்சின் பிரதம அதிதியான வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் குணவர்த்தன மற்றும் 21, 54, 56, 61 ஆவது படைப்பிரிவின படைத் தளபதிகள், வட மத்திய முன்னரங்கு பாதுகாப்பு எல்லை தளபதி, ஏனைய அதிகாரிகள் மற்றும் ஏனைய படைவீர்ர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். Running sports | Ανδρικά Nike