19th July 2019 21:29:34 Hours
இராணுவ பொறியியல் சேவைப் படையணியின் இராணுவ பில்லியட் மற்றும் ஸ்னோக்கர்ஷ் விளையாட்டு வீரர்கள் இம் மாதம் (19) ஆம் திகதி இராணுவ தலைமையகத்தில் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களை சந்தித்தனர்.
இந்த விளையாட்டு வீரர்கள் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகம் மற்றும் இராணுவ பொறியியல் சேவைப் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன அவர்களுடன் இராணுவ தளபதி அவர்களை சென்று சந்தித்தனர்.
பொறியியல் சேவைப் படையணியைச் சேர்ந்த பதவிநிலை சாஜன் S.G சுசந்த விக்ரம, லான்ஸ் கோப்ரல் M. M முபீன் மற்றும் லான்ஸ் கோப்ரல் T.D மதுரங்க போன்ற பில்லியட் விளையாட்டு வீரர்கள் சர்வதேச போட்டிகளில் இணைந்து கொண்டு வெற்றிகளை பெற்றுக் கொண்டு எமது நாட்டிற்கு நற்பெயர்களை பெற்றுத் தந்துள்ளனர்.
இராணுவ தளபதி அவர்கள் இந்த விளையாட்டு வீரர்களை சந்தித்த போது இவர்களது திறமை வெளிப்பாடுகளை முன்னிட்டு இவர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்து இவர்களை வாழ்த்தினார்.
இச்சந்தர்ப்பத்தில் இராணுவ பொறியியல் சேவைப் படையணியின் மத்திய கட்டளை தளபதி கேர்ணல் K.M.S குமார மற்றும் விளையாட்டு அதிகாரிகள் இணைந்திருந்தனர். best Running shoes brand | Nike sneakers