Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th July 2019 17:24:12 Hours

‘படையணி கட்டளை அதிகாரி’ பயிற்சி நெறியை மேற்கொள்ளும் அதிகாரிகளை இராணுவ தளபதி சந்திப்பு

புத்தள இராணுவ அதிகாரிகள் துறைசார் அபிவிருத்தி பயிற்சி நிலையத்தினால் பயிற்சி நெறி இல – 4 இன் கீழ் இடம்பெற்ற ‘படையணி கட்டளை அதிகாரி’ பயிற்சி நெறியை மேற்கொள்ளும் அதிகாரிகள் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களை ஜூலை மாதம் (11) ஆம் திகதி சந்தித்து சம்பந்தப்பட்ட துறைகளில் சிறந்த வெளிப்பாடு மற்றும் புரிந்துணர்வை பெற்றுக் கொள்வதற்காக இராணுவ தலைமையகத்தில் தங்களது கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

பயிற்சி நெறிகளை மேற்கொள்ளும் 22 அதிகாரிகள் இராணுவ தளபதியின் தலைமையில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களையும் இராணுவ தளபதிக்கு தெரிவித்தனர்.

இச்சந்தர்ப்பத்தில் பிரதி பதவிநிலை பிரதானி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா, காலாட் பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் துமிந்த கெபிடிவலான, உபகரண மாஸ்டர் ஜெனரல் மேஜர் ஜெனரல் H.G.I வித்தியானந்த, பொது நிர்வாக பிரதானி மேஜர் ஜெனரல் A.M.R தர்மசிரி, மாஸ்டர் ஜெனரல் போர்கருவி பணிப்பாளர் நாயகம் H.R.K.P பீரிஸ், பயிற்சி பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுராஜ் பங்ஷஜயா, நிதி மேலான்மை பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் துமிந்த சிறிநாக, நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் ஜயந்த செனவிரத்ன, இராணுவ அதிகாரிகள் துறைசார் அபிவிருத்தி பயிற்சி நிலையத்தின் பிரதான பயிற்சிவிப்பாளர் கேர்ணல் கபில தொலகே போன்ற உயரதிகாரிகள் இணைந்து கொண்டனர். Running Sneakers Store | 2021 New adidas YEEZY BOOST 350 V2 "Ash Stone" GW0089 , Ietp