Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th July 2019 11:06:43 Hours

பயிற்சி நெறிகளை மேற்கொள்ளும் அதிகாரிகள் கிளிநொச்சிக்கு சுற்றுலா பயணம்

மாதுருஓயா இராணுவ பயிற்சி பாடசாலையில் இலக்கம் 25 பயிற்சி பிரிவின் கீழ் ‘ஜீனியர் கமான்ட்’ பயிற்சி நெறிகளை மேற்கொள்ளும் பாதுகாப்பு அதிகாரிகள் கல்வி சுற்றுலா நிமித்தம் கிளிநொச்சி படைத் தலைமையகத்திற்கு ஜூலை மாதம் 8 – 9 ஆம் திகதிகளில் பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.

இம் மாதம் (8) ஆம் திகதி கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக கேட்போர் கூடத்தில் இந்த பயிற்சி நெறி அதிகாரிகளுக்கு கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய அவர்கள் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கடமை பொறுப்பு நிபந்தனைகள் தொடர்பான விளக்கங்களை விரிவுரைகள் மூலம் விளக்கினார்.

மேலும் பயிற்சி நெறிகளை மேற்கொள்ளும் அதிகாரிகள் இம் மாதம் (9) ஆம் திகதி 57, 571 ஆவது படைத் தலைமையகத்திற்கும், பூநகிரி கோட்டை, சங்குபிட்டி பாலம், 24 ஆவது விஜயபாகு காலாட் படைத் தலைமையகம், மனிதாபிமான நடவடிக்கைகள் இடம்பெற்ற நிலையங்களுக்கும், கிளிநொச்சி , ஆணையிறவு , காமினி குலரத்ன அவர்களது நினைவு தூபிகளையும் பார்வையிட சென்றார்கள்.

இந்த பயிற்சி நெறியை உள்நாட்டிலுள்ள 20 அதிகாரிகளும் வெளிநாட்டிலிருந்து வருகை தந்த 5 அதிகாரிகளும் மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Running Sneakers | Nike nike dunk high supreme polka dot background , Gov