Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

05th July 2019 16:57:49 Hours

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு புதிய தளபதியாக மேஜர் ஜெனரல் குணவர்தன நியமணம்

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு புதிய தளபதியாக மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன அவர்கள் (04) ஆம் திகதி வியாழக்கிழமை இராணுவ சம்பிரதாய முறைப்படி மத அனுஷ்டானங்களுக்கு மத்தியில் தனது பதவி பொறுப்பேற்றுக் கொண்டார்.

புதிதாக பதவி பொறுப் பேற்றுக் கொண்ட இப் புதிய தளபதிக்கு வன்னி பாதுகாப்பு படையினரால் நுலைவாயில் மரியாதை வழங்கப்பட்டதனை தொடர்ந்து யுத்தத்தில் மரணித்த போர் வீரர்கள் நினைவிடத்தில் மலர் வைத்து மரியாதை அஞ்சலி செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து இப் புதிய தளபதிக்கு 8 ஆவது பொறியியலாளர் படையணியின் படையினரால் மரியாதை அணிவகுப்பு வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து 56 ஆவது கட்டளை தளபதி 56 மேஜர் ஜெனரல் எச்.பி.செனவிரத்ன மற்றும் தலைமை பிரதாணி பிரிகேடியர் எச்.பி.ரணசிங்க அவர்களால் அணிவகுப்பு மைதானத்தில் வைத்து வரவேற்கப்பட்டார்.

அதன் பின்னர் மத அனுஷ்டானங்கள் 'சேத் பிரித்' பூஜைகளுடன் இவர் 18 ஆவது தளபதியாக கடமைகளை பொறுப்போற்றுக் கொண்ட அவர் இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் படைத் தலைமையக பிரதான அலுவலக வளாகத்தின் முன் ஒரு மா மரக்கன்றை நட்டுவைத்தார். பின்னர் படையினர்களுடன் தேநீர் விருந்துபசரத்திலும் கலந்து கொண்டார்.

அதனைத் தொடர்ந்து வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கேட்போர் கூடத்தில் வைத்து 800 க்கும் அதிகமான படையினர்களுக்கு மத்தியில் இப் புதிய தளபதி உறையாற்றினார்.

இந் நிகழ்விற்கு 21 ஆவது படைப்பிரிவின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் எச்.பி.என.கே. ஜயபத்திரன, 54 ஆவது படைப்பிரிவின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் டபில்யூ.ஜீ.எச்.ஏ.எஸ் பண்டார, 56 ஆவது படைப்பிரிவின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் எச்.பி செனவிரத்ன மற்றும் 61 ஆவது படைப்பிரிவின் தலைமை கட்டளை அதிகாரி பிரிகேடியர் கே.டி.சி.ஜீ.ஜே திலக்கரத்ன 62 ஆவது படைப்பிரிவின் தலைமை கட்டளை அதிகாரி பிரிகேடியர் ஜே.எம்.யூ.டி. ஜயசிங்க மற்றும் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தலைமை பிரதாணி பிரிகேடியர் எச்.பி ரணசிங்க கட்டளை தளபதிகள் பட்டாலியன்களின் கட்டளை அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் நூற்றுக்கணக்கான பிற படையணிகளின் அதிகாரிகள் படையினர்களும் கலந்து கொண்டனர். Asics footwear | Women's Designer Sneakers - Luxury Shopping