Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்கள்

04th July 2019 13:45:33 Hours

வன்னி பாதுகாப்பு படைத் தளபதிக்கு கௌரவ அணிவகுப்பு மரியாதை

வன்னி பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்கள் இராணுவ பிரதி பதவிநிலை பிரதானி பதவிக்கு தரமுயர்த்தப்பட்டு இடமாற்றம் செய்வதன் நிமித்தம் இவருக்கு வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் இம் மாதம் (2) ஆம் திகதி வழங்கி வைக்கப்பட்டன.

இவர் இந்த வன்னி பாதுகாப்பு படைத் தளபதி பதவியிலிருந்து இடமாற்றம் செல்லும் இத்தருணத்தில் இந்த பதவிக்கு மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன அவர்கள் நியமிக்கப்பட்டு இவர் (4) ஆம் திகதி இந்த புதிய பதவியை பொறுப்பேற்கவுள்ளார்.

இச்சந்தர்ப்பத்தில் 21, 54, 56, 61 மற்றும் 62 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதிகள் இணைந்து கொண்டனர். அத்துடன் வடக்கு பாதுகாப்பு முன்னரங்க படைத் தளபதி அவர்களும் இணைந்து கொண்டனர்.

இவர் வன்னி பாதுகாப்பு படைத் தளபதியாக கடமை வகித்த காலங்களில் நலன்புரி திட்டங்களின் கீழ் படையினர்களுக்கான தங்குமிட வசதிகள் மற்றும் பொது மக்களுக்கான நல்புரி திட்டங்களின் கீழ் பல்வேறுபட்ட உதவிகளை மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

வன்னி பாதுகாப்பு படைத் தளபதியாக கடமையாற்றிய சமயத்தில் வன்னி பிரதேசத்தில் இவர் ஆற்றிய சேவையை கௌரவிக்கும் முகமாக சிங்கள தமிழ் மற்றும் முஸ்லீம் சமூக பிரதிநிதிகளினால் இவருக்கு பாராட்டுக்கள் கிடைக்கப்பெற்றன.