Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

27th June 2019 13:10:11 Hours

இராணுவ மகளிர் வீராங்கனைக்கு தென் கொரியாவில் வெள்ளிப் பதக்கம்

இராணுவ மகளிர் படையணியைச் சேர்ந்த லான்ஸ் கோப்ரல் ஜே சி ஐ நிஷாந்தி கொரியா சர்வதேச மகளிர் கண்டுபிடிப்பு கண்காட்சி 2019 (KIWIE) இல் பங்கேற்றிக் கொண்டு இவரால் கண்டு பிடிக்கப்பட்ட உபகரணமான ‘பெண்களின் வாழ்க்கை வசதியில் சானிட்டரி பேட் மற்றும் பிற உயிர் கழிவுகளை பாதுகாப்பாக அகற்றுவதற்கான திறமையான எரியூட்டிகள் கண்டுபிடித்து அவைகளை இந்த கண்காட்சியில் முன்வைத்தார் அதன் பிரகாரம் இவருக்கு இந்த வெள்ளிப் பதக்கம் கிடைக்கப்பெற்றது.

கொரியா பெண்கள் பொறியாளர் கண்டுபிடிப்பாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் இம் மாதம் 20 – 23 ஆம் திகதி வரை இந்த கண்காட்சிகள் இடம்பெற்றன. இதன்போது 38 நாடுகளிலிருந்து போட்டியாளர்கள் 100 கண்டுபிடிப்பு உபகரணங்களை முன்வைத்துள்ளனர். இதில் இவரால் முன்வைக்கப்பட்ட எரியூட்டி உபகரணம் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது.

5 ஆவது இராணுவ மகளிர் படையணியைச் சேர்ந்த லான்ஸ் கோப்ரல் ஜே சி ஐ நியோசாந்தி அவர்கள் 2018 ஆம் தேசிய கண்டுபிடிப்பு கண்காட்சியில் பங்கேற்றிக் கொண்டு தங்கப் பதக்கத்தையும் பெற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

‘இலங்கை கண்டுபிடிப்பாளர்கள் ஆணையம்’ (எஸ்.எல்.ஐ.சி) இந்த புதுமையான தயாரிப்பை சர்வதேச தரத்திற்கு அனுப்பியதன் நிமித்தம் இந்த இராணுவ வீராங்கனை 2019 ம் ஆண்டிற்கான ‘கொரியா சர்வதேச மகளிர் கண்டுபிடிப்பு கண்காட்சியில் இலங்கை இராணுவத்தை பிரதிநிதித்துவபடுத்தி பங்கேற்றிக் கொண்டு இந்த சாதனையை இவர் பெற்றுக் கொண்டார்.

வெள்ளிப் பதக்கத்தை பெற்றுக் கொண்டு எமது நாட்டிலுள்ள கொழும்பு சர்வதேச பண்டாரநாயக விமான நிலையத்திற்கு இம் மாதம் (26) ஆம் திகதி வருகை தந்த இந்த இராணுவ மகளிர் வீராங்கனையை தொண்டர்படைத் தலைமையகத்தின் இராணுவ மகளிர் படையணியின் தொடர்பாடல் அதிகாரி லெப்டினன்ட் கேர்ணல் சமன் ஹெட்டியாரச்சி மற்றும் ஆராய்ச்சி பகுப்பாய்வு திட்டம் மற்றும் மேம்பாட்டு கிளை பணியகத்தின் பதவிநிலை 1 தரத்திலிருக்கும் லெப்டினன்ட் கேர்ணல் விராஜ் கருணாரத்ன மற்றும் இராணுவ மகளிர் படையணியின் பதவி நிலை 1 தரத்திலிருக்கும் அதிகாரியான மேஜர் நயோமி ரத்னாயக மற்றும் படை வீராங்கனைகள் வரவேற்றனர். Sports Shoes | 『アディダス』に分類された記事一覧