Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

25th June 2019 17:00:18 Hours

பின்தங்கிய குடும்பத்தினருக்கு இராணுவத்தினரால் உதவிகள்

வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்களது வழிக்காட்டலின் கீழ் கேர்ணல் அனில் பீரிஸ் அவர்களது தலைமையில் சமூக நலன்புரி திட்டத்தின் கீழ் வெஹரஹெவ புத்தன்ஹல்ல பதவி பராக்கிராமபுர பகுதியில் வசிக்கும் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பத்தாருக்கு வீடுகள் நிர்மானிப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா இம் மாதம் (23) ஆம் திகதி இடம்பெற்றது.

திரு எச்.எம். பிரியந்த பிரேமாசிரி அவர்கள் தனது குடும்பத்தினர் மற்றும் குழந்தைகளுடன் கஸ்ட்டங்களுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டுவருவதை அவதானித்து 62 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் தம்மிக ஜயசிங்க அவர்களது கண்காணிப்பின் கீழ் 623 ஆவது படைத் தலைமையகத்தினால் இந்த கட்டிட நிர்மான பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த நன்கொடையாளரான திருமதி பிரியங்கனி பெரேரா அவர்களின் நிதியுதவியுடன் இந்த பயனாளிக்கு இந்த வீடு தண்ணீர், மின்சார வசதிகளுடன் அமைத்து வழங்கப்படவுள்ளன.

இதற்கு முன்பு வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் 06 வீடுகள் மதவாச்சி, செல்லாலிஹினிகம, கனேசபுரம், பம்பைமடு, கலேன்பிந்துனு வெவ மற்றும் மணலாறு போன்ற பிரதேசங்களில் நிர்மானிக்கப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்த அடிக்கல் நாட்டு நிகழ்வில் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகம், 62, 622 ஆவது படைத் தலைமையகத்தின் சிவில் தொடர்பாடல் அதிகாரிகள், 11 ஆவது இலங்கை பீரங்கிப் படையணியின் கட்டளை அதிகாரி மற்றும் வீட்டுப் பயனாளியான திரு எச் எம் பிரியந்த பிரேமசிறி போன்றோர் கலந்து கொண்டனர். Running sports | Nike for Men