Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

17th June 2019 13:41:10 Hours

தமது ஒருநாள் சம்பளத்தை ஒதுக்கி அபேக்ஷா வைத்தியசாலைக்கான நன்கொடையை வழங்கிய இராணுவத்தினர்

இராணுவத் தளபதியான லெப்டின்னட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களின் எண்ணக்ருவிற்கமைய இராணுவப் படையினரின் ஒருநாள் சம்பளத்தை ஒதுக்கீடு பணத்தின் நன்கொடையின் மூலம் மஹரகமவில் உள்ள அபேக்ஷா புற்றுநோய் வைத்தியசாலைக்கு சம்சுங் HS40 வகையிலான இரு அல்ட்ரா ஸ்கானர்கள் இன்று காலை (17) இவ் வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டது.

இதற்கான நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட இராணுவத் தளபதியான லெப்டின்னட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களை மஹரகமவில் அபேக்ஷா புற்றுநோய் வைத்தியசாலை பணிப்பாளரான வைத்தியர் வசந்த திஸாநாயக்க அவர்கள் மற்றும் வைத்திய அதிகாரிகள் போன்றோர் வரவேற்றனர்.

இந் நிகழ்வில் உரையாற்றிய அபேக்ஷா புற்றுநோய் வைத்தியசாலை பணிப்பாளரான வைத்தியர் வசந்த திஸாநாயக்க அவர்கள் இத் திட்டமானது எவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட்டது என்பது தொடர்பாக விளக்கினார். அந்த வகையில் தான் கொழும்பு ஆனந்தாக் கல்லூரியின் பழைய மாணவரான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களை சந்தித்தபோது அவர் என்னிடம் புற்றுநோய் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நபர்கள் குறிப்பாக சிறார்களுக்கு இராணுவத்தால் யாதாயினும் உதவிகள் தேவையாயின் என வினவிய வேளை அவர் என்னிடம் புற்றுநோய் ஸ்கானர் வகைகளை இவ் வைத்தியசாலைக்கு வழங்குவதாக என்னிடம் உறுதிகூறினாரென வைத்தியர் திஸாநாயக்க அவர்கள் தெரிவித்ததோடு இதன் போது இராணுவத் தளபதியான லெப்டின்னட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களும் உரையாற்றினார்.

இந் நிகழ்வில் உயிர் நீத்த படைவீரர்களுக்கான பரம வீர விபூஷன பதக்கம் வழங்கும் நிகழ்வு 22ஆம் திகதி மே மாதம் இடம் பெற்றது. இதன் போது இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்கள் உத்தியோக பூர்வமாக புதிய ஸ்கானர்களை பெற்றுக் கொள்வதற்கான 8.2மில்லியன் ருபா பெறுமதியான காசோலையை மேன்மைதங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு வழங்கப்பட்டது.

இந் நன்கொடை தொடர்பாக இராணுவத்தினருக்க சிறந்ததோர் வழிப்புணர்வை இராணுவ படைத் தலைமையகங்கள் மற்றும் படைப் பிரிவுகளிற்கு விளக்கியதன் நிமித்தம் இவர்கள் உவந்து தமது ஒரு நாள் சம்பளத்தை இப் புற்றுநோய் வைத்தியசாலைக்கு ஒதுங்குவதற்காக முன்வந்துள்ளனர்.

அந்த வகையில் இவ் அல்ட்ரா ஸ்கானர் வகைகள் ;; கதிர்வீச்சிற்கு பதிலாக இவ் ஒலி அலைகளை பயன்படுத்தவதன் காரணமாக பாவனைக்கு உகந்த வகையில் பாதுகாப்பாக காணப்படுகின்றது. இவ் அல்ட்ரா ஸ்கானர் வகையின் மூலம் கருவின் படிமுறை வளர்ச்சியை மதிப்பிடப் பயன்படுத்தப்படுவதுடன் குடல் , இதயம் சிறுநீரகம், மற்றும் வயிறு போன்ற உடல் பாகங்களின் பிரச்சினைகளையும் கண்டறிய உதவுகின்றது. பயாப்சிகள் போன்ற நிலைப்பாட்டிலும் அவற்றை கண்டறிய உதவுகின்றது. Best jordan Sneakers | Top Quality adidas Yeezy 700 V3 "Eremiel" GY0189 , Ietp