Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

13th June 2019 16:31:55 Hours

ஈரான் தூதுவர் விஜயம்

ஈரான் நாட்டிற்கான இலங்கை தூதரகத்தின் தூதுவர் மதிப்புக்குரிய திரு முகம்மது ஜெய்ரி அமிரானி அவர்கள் இம் மாதம் (13) ஆம் திகதி இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களை இராணுவ தலைமையகத்தில் சந்தித்தார்.

இராணுவ தலைமையகத்திற்கு வருகை தந்த ஈரான் தூதுவரை இராணுவ பொது நிர்வாக பிரதானி மேஜர் ஜெனரல் ஏ.எம்.ஆர் தர்மசிறி அவர்கள் வரவேற்றார்.

இச்சந்திப்பின் போது தற்போதைய பாதுகாப்பு நிலைமை, நல்லிணக்க நகர்வுகள் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையில் நிலவும் நீண்டகால உறவுகள் மற்றும் அந்த பரஸ்பர நல்லெண்ணம் மற்றும் ஒத்துழைப்பு பிணைப்புகளை மேலும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவம் தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

இச்சந்தர்ப்பத்தின் போது ஈரான் தூதரகத்தின் பாதுகாப்பு இணைப்பதிகாரி கெப்டன் மன்சூர் சமான் பிரா அவர்களும் இணைந்து கொண்டார்.

பின்னர் இராணுவ தளபதி அவர்களினால் இவர்களது வருகையை முன்னிட்டு நினைவுச் சின்னமும் பரிசாக வழங்கி இவர்களை கௌரவித்தார். buy footwear | Air Jordan Release Dates 2020