Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th June 2019 17:05:21 Hours

புதிதாக பதவியுயர்த்தப்பட்ட உயரதிகாரிக்கு உத்தியோகபூர்வ மரியாதை

இராணுவத்தில் புதிதாக மேஜர் ஜெனரல் தரத்திற்கு பதவியுயர்த்தப்பட்ட கஜபா படையணியைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் பி ஜே கமகே அவர்களுக்கு சாலியபுரத்தில் அமைந்துள்ள கஜபா படையணி தலைமையகத்தில் இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் இம் மாதம் (9) ஆம் திகதி இடம்பெற்றது.

படைத் தலைமையகத்திற்கு வருகை தந்த இந்த உயரதிகாரியை கஜபா படையணியின் பிரதி கட்டளை தளபதி கேர்ணல் எல் எச் எம் ராஜபக்‌ஷ அவர்கள் வரவேற்றார். பின்னர் கஜபா படையணியினால் இவரை வரவேற்கும் முகமாக அணிவகுப்பு மரியாதைகள் வழங்கப்பட்டன.

அதனை தொடர்ந்து கஜபா படையணியின் பிதாவான மேஜர் ஜெனரல் விஜய விமலரத்ன அவர்களது நினைவு தூபிக்கு சென்று இவர் மரியாதை அஞ்சலிகளை செலுத்தினார்.

பின்னர் படையினர்கள் மத்தியில் சிறப்புரையொன்றையும் ஆற்றினார். இந்த நிகழ்வுகள் கஜபா படையணியின் படைத் தளபதி, பதவி நிலை பிரதானி மற்றும் கொமாண்டோ படையணியின் படைத் தளபதியான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களது பூரண ஏற்பாட்டில் இடம்பெற்றது.

மேலும் இந்த நிகழ்வில் 21 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமார ஜயபதிரன, கஜபா படையணியின் கவுன்சில் அங்கத்தவரும் 23 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் டப்ள்யூ ஏ கே பீ உதுலுபொல, கஜபா படையணியின் பிரதி கட்டளை தளபதி, கட்டளை அதிகாரிகள், பதவி நிலை அதிகாரிகள் மற்றும் உயரதிகாரிகள் இணைந்து கொண்டனர். Running sport media | Nike nike dunk high supreme polka dot background , Gov