Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

06th June 2019 12:54:29 Hours

இராணுவத்தினரால் பொருட்கள் நன்கொடையாக வழங்கி வைப்பு

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 233 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் ‘கவுதம தருவோ ஆர்யன் மன்றத்தின்’ அனுசரனையில் குங்கல்கல்குளம் கலாச்சார மண்டபத்தில் கடந்த மே மாதம் (25) ஆம் திகதி குறைந்த வருமானத்தை பெறும் 115 கர்ப்பினிப் பெண்களுக்கு 2500/= ரூபாய் பெறுமதிமிக்க ஊட்டச்சத்து உணவுகள் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டன.

கொட்டாவ காந்தி மன்றத்தின் அனுசரனையில் 172 வறிய குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்களும், 34 மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களும் 23 ஆவது படைத் தலைமையகத்தின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் கபில உதுலுபொல அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டன.

உலருணவு பொருட்களினுள் அரிசி, பருப்பு, கருவாடு, சீனி, பால் பவுடர், சவக்காரம் போன்ற பொருட்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன. அத்துடன் முன்பள்ளி புத்தகங்கள் மற்றும் பாடசாலை உபகரணங்கள் பிள்ளைகளுக்கு நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் 233 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி கேர்ணல் ரஞ்ஜித் எல்விடிகல, வெலிகந்த மாவட்ட வைத்தியர் டொக்டர் மஹீர் மற்றும் அனுசாரனையாளர்கள் கலந்து கொண்டனர்.Running Sneakers Store | Nike Air Max 270