Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

03rd June 2019 17:20:58 Hours

நாடளவியல் ரீதியாக இராணுவத்தினரது ஏற்பாட்டில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வுகள்

முஸ்லிம் சமூகத்தின் உறுப்பினர்களுடன் ஒற்றுமை நல்லுணர்வை மேம்படுத்தும் நோக்கத்துடன் நாடளவியல் ரீதியாக இடம்பெற்ற இப்தார் நிகழ்வுகள் மிகவும் கோலாகாலமாக இடம்பெற்றது.

கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் அநுர ஜயசேகர அவர்களது தலைமையில் 23 ஆவது சிங்கப் படையணி, 8 ஆவது தேசிய பாதுகாப்பு படையணியின் பூரண ஏற்பாட்டுடன் கடந்த மே மாதம் (28) ஆம் திகதி செங்கமுவ மற்றும் கஞ்சனாகுடா பிரதேசங்களில் இப்தார் நிகழ்வுகள் இடம்பெற்றது.

ரம்லான் பண்டிகையை முன்னிட்டு வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்களது வழிக் காட்டலின் கீழ் இப்தார் நிகழ்வு வவுனியா ஜூம்மா பள்ளிவாசலில் 500 முஸ்லீம் பக்தர்களின் பங்களிப்புடனும், இராணுவத்தினரது பங்களிப்புடன் கடந்த மே மாதம் (30) ஆம் திகதி இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் புனித குர்ஆன் எம் சி அமீர் மௌவி அவர்களினால் ஓதப்பட்டு பேச்சாளர் மதகுருவான முகமட் ரிஷாட் ரவஹி அவர்களின் பூரண ஏற்பாட்டுடன் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் வன்னி பாதுகாப்பு படைத் தளபதி, 21, 61, 62 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மற்றும் பாதுகாப்பு முன்னரங்க படைத் தளபதி, விமானப்படை ,பொலிஸ் அதிகாரிகள் இணைந்திருந்தனர்.

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய அவர்களது வழிக்காட்டலின் கீழ் இப்தார் நிகழ்வு நாச்சிகுடா ஜூம்மா பள்ளிவாசலில் இம் மாதம் (01) ஆம் திகதி இடம்பெற்றது. இந்த நிகழ்வுகள் 65 ஆவது படைப் பிரிவின் கீழுள்ள 19 ஆவது இலேசாயுத காலாட் படையணி, 11 ( தொ) கஜபா படையணியின் பூரண ஏற்பாட்டுடன் 400 முஸ்லீம் பக்தர்களது பங்களிப்புடன் இடம்பெற்றது. மேலும் 661 ஆவது படைத் தலைமையகத்தின் படைத் தளபதி கேர்ணல் கே எச் எம் எஸ் விக்ரமரத்ன அவர்களது ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட இப்தார் நிகழ்வு பள்ளிக்குடா ஜூம்மா பள்ளிவாசலில் இம் மாதம் (01) ஆம் திகதி 66, 651 ஆவது படைத் தளபதிகளின் மற்றும் 20 முஸ்லீம் பக்தர்களது பங்களிப்புடன் இடம்பெற்றது.

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரவிப்பிரிய அவர்களினால் வறிய குடும்பத்தைச் சேர்ந்த அப்பிரதேசத்தைச் சேர்ந்த நபர்களுக்கு 30 உலர் உணவு பொதிகள் இந்த நிகழ்வினூடாக அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டன. best Running shoes brand | Air Jordan Release Dates 2020