Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

03rd June 2019 16:31:05 Hours

இராணுவ பாதுகாப்புடன் இடம்பெற்ற இசை நிகழச்சி

கடற்த 4/21 NTJ தாக்குதலின் பின்பு நாட்டின் பொது மக்களது இயல்பு நிலைமை பாதிப்படைந்து வீழ்ச்சியடைந்திருந்தது. தற்போது நாட்டின் பாதுகாப்பு இராணுவத்தினரால் உறுதிப்படுத்தப்பட்டு முன்பை போல் மக்கள் தற்போது மகிழ்ச்சிகரமாக தமது பொழுது போக்குகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இராணுவ தளபதி அவர்களது எண்ணக்கருவிற்கமைய ‘எகட சிடிமு’ எனும் தொணிப்பொருளின் கீழ் இராணுவத்தினரின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட இன்னிசை நிகழ்வு இம் மாதம் முதலாம் திகதி அநுராதபுரம் பொது மைதானத்தில் இடம்பெற்றது.

இந்த இன்னிசை நிகழ்ச்சியை இலங்கையில் புகழ் பெற்ற இன்னிசை குழுவான ‘சஹாரா பிளேஷ்’ வழங்கினர். இந்த இன்னிசை நிகழவில் வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா, 21 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமார் ஜயபதிரன அவர்களது பங்களிப்புடன் 1000 க்கு மேலான பெரும்பாலான சனத்திரலுடன் இடம்பெற்றது.

இந்த இன்னிசை நிகழ்விற்கு பிரதம அதிதியாக வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்கள் வருகை தந்தார். இந்த இன்னிசை நிகழ்ச்சியில் இராணுவ நடன குழுவினரது நடன நிகழ்ச்சிகளும் இடம்பெற்றது.

மேலும் பெல்லன்வில நடை பூங்காவில் இராணுவ இன்னிசை குழுவினரது இன்னிசை நிகழ்வு இம் மாதம் (2) ஆம் திகதி மாலை 4.30 மணி தொடக்கம் 7.30 மணி வரை பெரும்பாலானரது பங்களிப்புடன் இடம்பெற்றது. latest Nike Sneakers | Nike Shoes