Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

01st June 2019 11:36:03 Hours

புத்தள பயிற்சி நிலையத்தில் இடம்பெற்ற கருத்தரங்கு

புத்தளையுலுள்ள அதிகாரி தொழில் வளர்ச்சி நிலையத்தில் 2019 ஆம் ஆண்டிற்கான கருத்தரங்கு இம் மாதம் (30) ஆம் திகதி இடம்பெற்றது. இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் வருகை தந்தார் இவரை புத்தள பயிற்சி நிலையத்தின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சந்தன குணவர்தன அவர்கள் வரவேற்றார்.

பின்னர் இந்த கருத்தரங்கில் வரவேற்புரை பயிற்சி நிலையத்தின் கட்டளை தளபதி அவர்களினால் ஆற்றப்பட்டன.

'இலங்கையில் தேசிய பாதுகாப்பு மூலோபாயம் உருவாகுவதில் சவால்கள்' எனும் தலைப்பில் இந்த கருத்தரங்குகள் இம்முறை இடம்பெற்றன.

இந்த கருத்தரங்கின் பிரதம அதிதியான இராணுவ தளபதி லெப்டின ன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் உரையாற்றும் போது தேசிய நலன்களை நீடிக்கும் ‘இலங்கை தேசிய நலன்களையும் இலக்குகளையும் புரிந்து கொள்தல்’ உள்ளடக்கிய பல்வேறு பொருத்தமான துணை கருப்பொருள்கள் தொடர்பாக இந்த கருத்தரங்கு அமர்வுகள் விரிவுபடுத்துவதற்கான ஒரு திடமான தளமாக அமைந்துள்ளது. இதன்போது நாம் உண்மையான சரியான விளக்கம் அளித்தோமா? தேசிய நலன்களின் உண்மையான “கருத்துருவாக்கம், தேசிய அச்சுறுத்தல், பாதுகாப்பு குறிக்கோள்களை உச்தேசித்தல், உண்மையான நவீனமயமாக்கல், உணரப்பட்ட அச்சுறுத்தல், பாரம்பரியம், பன்னாட்டு நர்கோடிக்ஸ் மற்றும் உலகமயமாக்கல் போன்ற விடயங்களில் எமக்கு பத்திரங்கள் வேண்டுமா? தேசிய பாதுகாப்பு சவால்கள்’ பொருத்தமான நிறுவனங்களுடன் ஒரு இயல்பான இயக்கத்தின் அவசியம், அரசின் முழுமையான அணுகு முறைக்கு இராணுவத்தை மறுசீரமைத்தல்’ பாதுகாப்பு துறைக்கான விருப்பங்கள்’, பாதுகாப்புத் துறைச் சீர்திருத்தங்கள் மூலம் படைகளின் பெருக்கம், பாதுகாப்பு துறை சீர்திருத்தங்களை கருதுதல், பாதுகாப்பு மற்றும் சீர்திருத்த சூழலில் சீர்திருத்தங்கள், ஆயுதப்படையை உரிமைப்படுத்துவற்கான தேவை போன்ற விடயங்களை உள்ளடக்கி சிறப்புரை ஆற்றப்பட்டன.

புத்தள பயிற்சி நிலையத்தில் 13 ஆவது தடைவையாக இடம்பெற்ற 2019 ஆம் ஆண்டிற்கான இந்த கருத்தரங்கின் போது முப்படையைச் சேர்ந்த 64 சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த கருத்தரங்கில் பேராதனை, கொதலாவல பாதுகாப்பு, கொழும்பு பல்கலைகழகங்களைச் சேர்ந்த பேச்சாளர்கள் விரிவுரைகளை நடத்தினர். அத்துடன் இராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் பொலிஸ் பேச்சாளர்களும் சிறப்புரை ஆற்றினர்.

சார் ஜோன் கொதலாவல பாதுகாப்பு பலகலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் அமல் ஜயவர்தன, தேசிய கல்வி ஆணையத்தின் பேராசிரியர் டப்ள்யூ ஐ சிறிவீர, கொழும்பு பல்கலைக்கழகத்தின் கலாநிதி மனீஷா பஷ்கியுல், அமெரிக்கா தேசிய பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பிரிவீன் அபேரத்ன, கொழும்பு பல்கலைக்கழகத்தின் செல்வி மெனிக் வகும்புர, போதை தடுப்பு பிரிவின் பிரதி பொலிஸ் மாஅதிபர் சஞ்ஜீவ மெதவத்த, மேஜர் ஜெனரல் கே பி ஏ ஜயசேகர, திரு நிலந்தன் நிரூதன், எயார் கொமடோர் ஏ.ஏ.யூ.பி ராஜபக்‌ஷ, மேஜர் ஜெனரல் ஆர்.டப்ள்யூ.டப்ள்யூ.ஏ.டீ.பீ ராஜகுரு, திரு ஜோஜ் கூக், ரியர் அத்மிரால் வயி என் ஜயரத்ன, மேஜர் ஜெனரல் ஜே. ஆர் குலதுங்க, செல்வி டப்ள்யூ.பி.ஜி.டீ.ஜே சேனாநாயக மற்றும் மேஜர் ஜெனரல் பி ஆர் வணிகசூரிய போன்ற அதிகாரிகள் இந்த கருத்தரங்குகளில் விரிவுரைகளை நிகழ்த்தினர்.

இரண்டு நாட்கள் இந்த கருத்தரங்குகள் இடம்பெற்றது. இந்த கருத்தரங்கிற்கு இராணுவ தளபதியின் வருகையை முன்னிட்டு புத்தள பயிற்சி நிலையத்தின் கட்டளை தளபதி அவர்களினால் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களிற்கு நினைவு சின்னம் வழங்கி கௌரவிக்கபட்டன. affiliate link trace | 2021 New adidas YEEZY BOOST 350 V2 "Ash Stone" GW0089 , Ietp