Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

28th May 2019 10:26:52 Hours

அமைதி காக்கும் பணிகளில் ஈடுபட்ட இரண்டு இலங்கை அதிகாரிகளுக்கு கௌரவிப்பு

இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த மேஜர் ஹமன்ஹொட வசந்த தினேஷ் ஜயவிக்ரம மற்றும் சாஜன் சாகரலாகே சமந்த விஜயகுமார 2018 ஆம் ஆண்டு மாலியில் ஐக்கிய நாடுகளின் கடமைகளில் இருந்த சமயத்தில் தாக்குதலுக்கு உள்ளாகி பலியானர். இவர்களது சேவையை கௌரவித்து டெக்ஹம்மர்ஷ்க்கோல்ட் பதக்கம் வழங்கப்படவுள்ளதாக ஐக்கிய நாட்டு ஊடக அறிக்கை மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

ஐ.நா. தலைமையகம் வெள்ளிக்கிழமை ஐக்கிய நாடுகள் அமைதிகாப்பு சர்வதேச தினத்தை (25) ஆம் திகதி அனுஷ்ட்டிக்கின்றனர்

1948 ஆம் ஆண்டிலிருந்து அமைதி காக்கும் பணிகளில் ஈடுபட்டு உயிர்களை தியாகம் செய்த படையினருக்கு அஞ்சலி செலுத்துவதுடன், 2018, 2019 ஆம் ஆண்டுகளிலே 119 சிவில், இராணுவ, பொலிஸ் படையினர்களுக்கு இந்த டெக்ஹம்மர்ஷ்க்கோல்ட் பதக்கம் ஐக்கியநாட்டு பொது செயலாளர் அண்டோனியோ க்யூட்டர்ஸ் அவர்களினால் வழங்கப்படவுள்ளதாக ஐக்கிய நாட்டு சபை தெரிவித்துள்ளது.

தற்போது ஐ.நா. அமைதி காக்கும் பணிகளில் ஈடுபட்ட நாடுகளின் 32 ஆவது நாடாக இலங்கை பாரிய சேவைகளை வழங்கி விளங்குகின்றது .அபாயி, மத்திய ஆபிரிக்கா குடியரசு, ஹயிட்டி, லெபனான், மாலி, தெற்கு சூடான் மற்றும் மேற்கு சஹாரா போன்ற நாடுகளில் 676 பொலிஸ் மற்றும் இராணுவத்தினரது பங்களிப்புடன் அமைதி காக்கும் பணிகளை மேற்கொண்டுள்ளது.

கெப்டன் மெப்கை டயிகயின் பதக்கமானது கொங்கோ ஜனநாயக குடியரசில் சமாதான அமைதி காக்கும் பணிகளின் போது இருந்த சமயத்தில் தாக்குதலில் காயத்திற்குள்ளாகி உயிர் நீத்த போர்வீரன் கிட்டேயின் பொதுமக்களை பாதுகாப்பதன் நிமித்தம் வீரம், தியாக பாரிய சேவையை கௌரவித்து இவர்களது குடும்பத்தாருக்கு நியூயோக்கில் அமைதி காப்பாளர்களின் நினைவு தினத்தன்று இந்த பதக்கம் ஐக்கிய நாட்டுசெயலாளர் நாயகம் அவர்களினால் வழங்கப்படும்.

இந்த ஆண்டு நினைவு கூறும் முகமாக உலகளாவிய கருப்பொருள் 'பொது மக்களை பாதுகாத்தல், சமாதானத்தை பாதுகாத்தல்'. எனும் கருத்துக்கள், பொதுச் செயலாளர் அவர்களது அறிக்கையில் உள்ளடக்கப்பட்டிருந்தன. "இந்த ஆண்டு, ஐ.நா., பாதுகாப்புக் கவுன்சில் முதல், பொதுமக்களை காப்பாற்றுவதற்கான சமாதான முயற்சிகளை மேற்கொண்டு 20 ஆண்டுகளாகின்றன. அமைதி காக்கும் பணிகளில் ஈடுபடுகின்ற படையினர்கள் ஒவ்வொரு நாளும் வன்முறைகளிலிருந்து தனிப்பட்ட ஆபத்துக்களுக்கு மத்தியில் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாத்து வருகின்றனர்.

சமாதான காலத்தில் பணியாற்றிய அனைத்து ஆண்களுக்கும், பெண்களுக்கும் அஞ்சலி செலுத்தவதற்காகவும், சமாதானத்திற்காகவும் தங்கள் உயிர்களை இழந்தவர்களை நினைவு கூறி கௌரவிப்பதற்காக 2002 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிகாக்கும் சர்வதேச நாள் பொது சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டது.

யுஎன்எச்கியூ யில் 24 ஆம் திகதி குறிக்கப்படும் அதேவேளை, உலகெங்கிலும் உள்ள ஐ.நா. அலுவலகங்களிலும் மே 29 ம் திகதி இடம்பெறவுள்ளன. (தகவல்: ஐ.நா அலுவலகம்) Adidas shoes | Men Nike Footwear