Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd May 2019 19:44:25 Hours

இராணுவத்தின் மூத்த உயரதிகாரிகளான 10 பிரிகேடியர்கள் அடுத்த பதவிக்கு தரமுயர்வு

முப்படைகளின் முனைஞரும் பிரதானியுமான மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களினால் இராணுவத்திலுள்ள பிரிகேடியர்கள் 10 பேர் மேஜர் ஜெனரல் பதவிக்கு (22) ஆம் திகதி மாலை தரமுயர்த்தப்பட்டுள்ளனர்.

இலங்கை சமீக்ஞை படையணியைச் சேர்ந்த மத்திய பாதுகாப்பு முன்னரங்க கட்டளை தளபதி பிரிகேடியர் கே எம் ஆர் பி கருணாதிலக, இலங்கை இராணுவ பொலிஸ் படையணியைச் சேர்ந்த பூனானை ஆயுத கிடங்கு பிரதான ஒருங்கிணைப்பு அதிகாரி பிரிகேடியர் ஐ ஓ டப்ள்யூ மாடொல்ல, கஜபா படையணியைச் சேர்ந்த மின்னேரிய காலாட் பயிற்சி நிலையத்தின் கட்டளை தளபதி பிரிகேடியர் பி ஜே கமகே, கெமுனு காலாட் படையணியைச் சேர்ந்த 21 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் எச் பி என் கே ஜயபதிரன, விஜயபாகு காலாட் படையணியைச் சேர்ந்த இராணுவ மகளிர் படையணியின் படைத் தளபதி பிரிகேடியர் ஆர் கே பீ எஸ் கெடகும்புர, இராணுவ பீரங்கீப் படையணியைச் சேர்ந்த 68 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் ஏ எஸ் ஆரியசிங்க, இராணுவ பீரங்கீப் படையணியைச் சேர்ந்த 64 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் டப்ள்யூ டீ சி கே கொஷ்தா, கெமுனு காலாட் படையணியைச் சேர்ந்த சமாதான உதவி நடவடிக்கை பயிற்சி மையத்தின் கட்டளை தளபதி பிரிகேடியர் பி ஐ பதிரத்ன, கெமுனு காலாட் படையணியைச் சேர்ந்த 54 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் டப்ள்யூ ஜி எச் ஏ எஸ் பண்டார, கொமாண்டோ படையணியைச் சேர்ந்த இராணுவ சுபசாதனை பணியகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் பீ பி எஸ் சில்வா போன்ற இராணுவ மூத்த உயரதிகாரிகள் 2019 ஆம் ஆண்டு மே மாதம் 10 ஆம் திகதி தொடக்கம் மேஜர் ஜெனரல் பதவிக்கு தரமுயர்த்தப்பட்டுள்ளனர்.jordan release date | Saucony Lanzar JAV 2 - Unisex , Worldarchitecturefestival