Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

10th May 2019 16:46:35 Hours

மனிங் டவுனில் திருமணமாகிய அதிகாரிகளுக்கான புதிய 06 மாடிக் கட்டட விடுதி அமையப்பெறவுள்ளது

இராணுவத் தளபதியவர்களின் வழிகாட்டலின் கீழ் மேற்கு மாகாகனத்தில் இராணுவத் தலைமையகத்தில் சேவையாற்றும் திருமணமாகிய அதிகாரிகளின் நலன்கருதி இவர்களுக்காக புதிய 06 மாடிக் கட்டட விடுதியானது 20 அறைகளை உள்ளடக்கி மனிங் டவுனில் அமையப்பெறவுள்ளது. இதற்காக சுமார் 357.19 மில்லியன் ருபா செலவிடப்பட்டுள்ளதுடன் இதற்கான தளபாட வசதிகளும் அமையப் பெற்றுள்ளன.

அந்த வகையில் கடந்த வெள்ளிக் கிழமை (09) இராணுவ உபகரண மாஸ்டர் பணிப்பகத்தின் பணிப்பாளரான மேஜர் ஜெனரல் பிரசன்ன சந்திரசேகர அவர்களின் அழைப்பை ஏற்று அடிக்கல் நாட்டும் நிகழ்வில் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்கள் இதற்கான அடிக்கல் நாட்டும் விழாவில் கலந்து கொண்டதுடன் பதவிநிலைப் பிரதானியான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா இராணுவ சுகாதாரா சேவைப் பணிப்பக பணிப்பாளரான மேஜர் ஜெனரல் சஞ்சீவ முனசிங்க உபகரண மாஸ்டர் ஜெனரலான மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன பிரதான பதவிநிலைப் பிரதானியான நிஷ்ஷங்க ரணவன மற்றும் பல அதிகாரிகள் போன்றோரும் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வின் போது இராணுவத் தளபதியவர்கள் பௌத்த மத அனுஷ்டானங்களுக்கு அமைவாக வெற்றிலைத் தட்டை பௌத்த தேரர்களுக்கு வழங்கி ஆசிகளைப் பெற்றார். ஆதனைத் தொடர்ந்து அடிக்கல் நாட்டும் விழாவும் இடம் பெற்றது.

சில நிமிடங்களின் பின்னர் இராணுவத் தளபதியவர்கள் இப் பிரதேச வளாகத்தில் அதிகாரிகளின் நலன் கருதி அமையப்பெற்ற புதிய விடுமுறை விடுதியை திறந்து வைத்தார். மேலும் இவ்வாறு அமையப் பெறவிருக்கின்ற அதிகாரிகளுக்கான விடுதியானது பல்வாறான பிரதேசங்களில் இருந்து கொழுப்பிற்கு சேவையாற்றும் நோக்கில் கடமைபுரியும் அதிகாரிகளின் நலன்கருதி இரவு வேளைகளில் சேவையாற்றும் அதிகாரிகளின் நலன் கருதி அமையப்பெற்றுள்ளது.

அதனைத் தொடர்ந்து இந் நிகழ்வில் கலந்து கொண்ட பிரதம அதிதியவர்கள் புதிதாக அமையப்பெற்ற விடுமுறை விடுதியை பார்வையிட்டார். Best Nike Sneakers | Trending