Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th April 2019 19:28:13 Hours

பலமான பாதுகாப்பு இயல்புநிலையை ஏற்படுத்தும்: மட்டக்களப்பில் இடம்பெற்ற வருடாந்த விருந்தில்; தெரிவிப்பு

கடந்த 29 ஆம் திகதி இடம்பெற்ற கூட்டு நடவடிக்கை கட்டளை தலைமையக ஸ்தாபிப்பின் பின்னர் மேற்கு பாதுகாப்பு படைத் தளபதியும் கூட்டு நடவடிக்கை தலைமையகத்தின் கட்டளை தளபதியுமான மேஜர் ஜெனரல் சத்தியப்பிரிய லியனகே அவர்களின் கட்டளையின் கீழ் மேல் மாகாணம் மற்றும் புத்தள மாவட்ட பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் இராணுவம், கடற் படை, விமானப் படையினர் பொலிசாருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டு வரும் ஒன்றிணைந்த கூட்டு நடவடிக்கையானது கடந்த 24 மணித்தியாலத்துக்குள்; தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ரியர் அடமிரல் டப்ல்யூ.எ.எஸ்.எஸ். பெரேரா, எயா வைஸ் மார்சல் டப்ல்யூ.எல்.ஆர.;பி.ரொட்ரிகோ மற்றும் கூட்டு நடவடிக்கை தலைமையகத்தின் கடற் படை, விமானப் படை, பொலிஸின் இணைப்பு அதிகாரியான பொலிஸ் அத்தியட்சகர் எல்.கே.டி. அனில் பிரியந்த மற்றும் கூட்டு நடவடிக்கையின் தலைமையகமும் பாதுகாப்பு படைகளின் பிரதாணியின் கீழ் இயற்குகின்றன.

மேலும் கொழும்பு, மாத்தரை, டிக்வல்ல, பன்டாரவல மற்றும் ஏனைய பிரதேசங்களில் கடந்த 24 மணித்தியாலத்துககுள் படைகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் இணைந்து வீதி தடுப்பு, ரோந்து நடவடிக்கைகள் மற்றும் தேடுதல் நடவடிக்கைகில்; ஈடுபட்டனர்.

அதேவலை, கிழக்கில் இடம் பெற்ற தாக்குதலுக்கு பிறகு நிலைமை வழமைக்கு திரும்பியுள்ளது மற்றும் பொது மக்கள் தங்களது முலுமையான நம்பிக்கையைஇராணுவத்தின் மீது வைத்துள்ளனர். மேலும் மேஜர் ஜெனரல் அருன ஜயசேகர அவர்கள் கடந்த 30 ஆம் திகதி செவ்வாய்க் கிழமை அன்று கிழக்கிலுள்ள பிரதான பிரதேசங்களை பார்வையிட்டு அங்குள்ள நிலைமைகளை மேற்பார்வை செய்தார்.

மட்டக்களப்பு தன்னாமுனை புனித ஜோசப் தேவாலயத்தின் வருடாந்த விருந்து நிகழ்வு மற்றும் தெய்வீக வழிபாட்டை முன்னிட்டு வரும் பல பக்தர்களின் நலன்கருதி இராணுவத்தினரால் பாதுகாப்பு வழங்கப்பட்டன. மேலும் 800 பக்தர்கள் மற்றும் 125 கத்தோலிக்க போதகர்கள் இவ்விருந்தில் கலந்துகொண்டனர். மட்டக்களப்பு ஆயர் ஜோசப் பொன்னய்யா மற்றும் திருகோணமலை மாவட்ட ஆயர் ஆகியோர் மேஜர் ஜெனரல் அருன ஜயசேகர அவர்களுடனான கலந்துரையாடலை மேற்கொண்டு இராணுவத்தின் தற்போதய பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தேவாலயத்துக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு சம்பந்தமாக தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.

அதேபோல் அம்பாரைக்கான தனது விஜயத்தினை மேற்கொண்டு பல சமய தலைவர்கள், கிழக்கு கடற்படை தளபதி, சிவில் சமூக தலைவர்கள், முப்படை மற்றும் அப்பிரதேசத்தில் சேவையாற்றும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட பலரை சந்தித்ததோடு, கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 24 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த முடலிகே மற்றும் அதன் கீழ் இயங்கும் படையகத்தின் படைத் தளயபதிகள் போன்றவர்களின் முன்னிலையில் பாதுகாப்பு முன்னேற்றம் சம்பந்தமான மதிப்பீட்டினையும் மேற்கொண்டார்.

மேலும் படையினர் அம்பாரை மாவட்டத்திலுள்ள தென் கிழக்கு பல்கலைக்கழகத்திற்கான பாதுகாப்பை வழங்கியதோடு கடந்த 24 மணித்தியாலத்துககுள் மட்டக்களப்பு, அம்பாரை, பொலன்னறுவை மற்றும் திருகோணமலையிலுள்ள புத்த ,கத்தோலிக்க மற்றும் இஸ்லாம் மதத்தவர்களை மேஜர் ஜெனரல் அருன ஜயசேகர அவர்கள் சந்தித்து, குறிப்பிட்ட பகுதிகளில் சந்தேகத்துக்கிடமான வன்முறைகளை கண்டறிந்து அவற்றுக்காக மேற்கொள்ளப்படும் சட்ட ஒழுங்கு முறைகளைப்பற்றி கலந்துறையாடினார்.

அதன்பிரகாரம் படையினர் கல்முனை, நிந்தவூர், சாய்ந்தமருது, சம்மாந்துறை ,நப்பத்துமுனை ,பொத்துவில், மட்டக்களப்பு மற்றும் அம்பாரை பிரதேசங்களுக்கான பாதுகாப்பை பலப்படுத்தி தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு ஐ.எஸ்ஐ.எஸ் பொறிக்கப்பட்ட எழுத்து, வாள் மற்றும் கத்தியுடனான ஒரு சந்தேக நபருடன் பல சந்தேக நபர்களை பொலிசாரிடம் ஒப்படைத்தனர். மற்றும் கிழக்கு பிராந்தியத்தில் பாதுகாப்பு படையினர் தங்களது பாதுகாப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். latest Nike Sneakers | Nike