Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

15th April 2019 20:57:46 Hours

யாழ்ப்பாணத்தில் இராணுவ சமுதாய கருத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்கான உதவிகள்

யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள குறைந்த வருமானத்தை பெறும் குடும்பங்களின் நலன் கருதி இராணுவத்தின் அர்ப்பணிப்புடன் வெளிநாட்டவர்களின் அனுசரனையுடன் , புதிய வீடுகள் மற்றும் சுகாதார வசதிகளை நிர்வகிக்கும் நோக்கத்துடன், நன்கொடை வீட்டு உபகரணங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மாணவர்களுக்கான புலமைப்பரிசில்கள் வழங்கி ஊக்குவிக்கும்நிகழ்வு இடம்பெற்றது.

யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி அவர்களது பூரன ஏற்பாட்டுடன் மற்றொரு கருத்திட்டத்தின் கீழ் ஓமானைச் சார்ந்த வெளிநாட்டவர்களான, திரு மோகன் ஷங்கர் மற்றும் திருமதி வதனி ஷங்கர் அவர்களது அனுசரனையுடன் 3 மில்லியன் ரூபாய் செலவில் இராணுவத்தினரது கட்டிட நிர்மான பணிகளுடன் கொடிகாமம் மற்றும் சுலிபுரம் பிரதேசத்தில் 11 ஆவது இலங்கை இலேசாயுத காலாட்பணியணி, 7 மற்றும் 15 ஆவது கஜபா படையணியின் பங்களிப்புடன் 3 வீடுகள் நிர்மானிக்கப்பட்டு உரிமையாளருக்கு கையளிக்கப்பட்டன.

வறிய குடும்பத்தைச் சேர்ந்த 10 பேரது நிலைமை தொடர்பாக யாழ்ப் படைத் தளபதியின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டு அவர்களுக்கு சுகாதார வசதிகளின் நிமித்தம் சுகாதார உபகரணங்கள் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டன.

முதலாவது விஜயபாகு காலாட் படையணியின் முழுமையான பங்களிப்புடன் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

திரு மோகன் சங்கர் மற்றும் திருமதி வதனி சங்கர் அவர்களது அனுசரனையில் கல்வி கற்கும் மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் 25 பேருக்கு 2500/= ரூபாய் பெறுமதிமிக்க புலமைப்பரிசில்கள் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டன.

கலைவானி சமூக நிலையத்தில் வைத்து வீட்டு உரிமையாளர்கள் மூவருக்கும் இந்த வீடுகள் கையளிக்கப்பட்டன.

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இருக்கும் 51, 52 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் இந்த திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. Running Sneakers Store | NIKE Chaussures, Sacs, Vetements, Montres, Accessoires, Accessoires-textile, Beaute, Sous-vetements - Livraison Gratuite