Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

10th April 2019 23:51:48 Hours

சர்வதேச ரீதியில் இடம்பெற்ற பெட்மின்டன் போட்டிகள்

இலங்கை இராணுவத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட 2019 ஆம் ஆண்டிற்கான பெட்மின்டன் போட்டிகள் இலங்கை தேசிய பெட்மின்டன் சங்கத்தின் தலைமையில் இடம்பெற்றது. இந்த போட்டிகள் ஏப்ரல் மாதம் 2 ஆம் திகதி தொடக்கம் 9 ஆம் திகதி வரை பனாகொடையிலுள்ள இராணுவ உள்ளரங்க மைதானத்தில் இடம்பெற்றது.

இந்த பெட்மின்டன் இறுதிச் சுற்றுப் போட்டியின் பரிசளிப்பு வழங்கும் நிகழ்விற்கு பிரதம அதிதியாக இராணுவ தளபதி லெப்டின ன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் இராணுவ பெட்மின்டன் சங்கத்தின் அழைப்பையேற்று வருகை தந்தார்.

பெட்மின்டன் போட்டிகளில் மொத்தமாக இராணுவம், கடற்படை, விமானப்படை, பொலிஸ் மற்றும் சிவில் பெட்மின்டன் கழகங்களைச் சேர்ந்த 1293 ஆண். பெண் போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். போட்டியில் பங்கு பற்றி வெற்றீயீட்டிய வெற்றியாளர்களுக்கு பதக்கங்கள் மற்றும் வெற்றிக் கிண்ணங்கள் ஃப்ளெக்ஸ் ஸ்போர்ட்ஸ் பிரைவேட். லிமிட்டெட் நிறுவனத்தின் மூத்த அதிகாரிகளான திரு சஞ்ஜீவ அகுரேடிய மற்றும் திரு கமிந்த தசநாயக அவர்களினால் பரிசுகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் இலங்கை இராணுவ பெட்மின்டன் சங்கத்தின் தலைவரும் , இராணுவ திட்டமிடல் பணிப்பகத்தின் பணிப்பாளருமான பிரிகேடியர் துமிந்த கமகே அவர்களினால் வாழ்த்துரை ஆற்றப்பட்டது.

பெட்மின்டன் போட்டிகள் பெட்மின்டன் வீரர், வீராங்கனைகளை சர்வதேச ரீதியில் உயர்த்துவதற்கான நோக்கத்துடன் முன்வைக்கப்பட்டிருந்தன.இந்த நிகழ்வில் இராணுவ செயலாளரும், சமிக்ஞை படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் அஜித் விஜயசிங்க, இராணுவ விளையாட்டுத்துறை பணியகத்தின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அநுர சுத்தசிங்க, இராணுவ மாஸ்டர் ஜெனரல் போர்கருவி மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன, பெட்மின்டன் சங்கத்தின் தலைவர் திரு நிஷாந்த ஜயசிங்க, பிளெக்‌ஷ் ஸ்போட்ஷ் நிறுவனத்தின் பொது முகாமையாளர்களான திரு. சஞ்ஜீவ அகுரேடிய மற்றும் திரு கமிந்த தசநாயக, இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இணைந்திருந்தனர்.

இந்த போட்டிகளில் பங்கு பற்றியபிரதான நடுவர்களான திரு சஞ்சய விஜயசேகர மற்றும் மற்றைய நடுவர்களையும் அவர்களது பாரிய சேவையினை முன்னிட்டு பெட்மின்டன் சங்கத்தினால் இவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. latest Nike release | Men Nike Footwear