Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

07th April 2019 08:05:54 Hours

தேசிய புதுவருட வன அரனக அசிரிய நிகழ்வு இராணுவத்தால் முன்னெடுப்பு

தேசிய சிங்கள சிங்கள தமிழ் கலாச்சார புத்தாண்டை முன்னிட்டு இராணுவத்தினரால் வன அரணக அசிறிய எனும் தலைப்பில் கொலொன்கொல பதவிய ஸ்ரீ புர பிரதேசத்தில்2019ஆம் ஆண்டின் சிறிசர புதுவருட நிகழ்வுகள் கடந்த சனிக் கிழமை (06) இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களின் பங்களிப்போடு கொலென்கொல வௌ எனும் பிரதேசத்தில் இராணுவத்தினால் விவசாய தேவைகளுக்கென புதிய நீர்தாங்கியும் வடிவமைத்து வழங்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் வன அரணக அவுருது உதாவ எனும் தலைப்பில் இடம் பெற்ற புதுவருட நிகழ்வுகள் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்களின் தலைமையில் இடம் பெற்றதோடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இதன் போது கலந்து கொண்ட மதிப்பிற்குறிய ஜனாதிபதியவர்களை வன்னி பாதுகாப்பு படைத் தளபதியவர்கள் வரவேற்றதுடன் இங்கு நிர்மானிக்கப்பட்ட நீர் தாங்கியானது ஜனாதிபதியவர்களின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இப் புதுவருட நிகழ்வுகளின் முதற் கட்ட அம்சமாக கொலொங்கொல வரையிலான ஆண் பெண்கள் இருவருக்கும் இடையிலான மரதன் ஓட்டப் போட்டிகள் இடம் பெற்றதோடு இதற்கான ஒழுங்குகளை 62ஆவது படைத் தலைமையக தளபதியான பிரிகேடியர் தம்மிக்க ஜயசிங்க அவர்கள் மேற்கொண்டார். இதன் போது நுற்றுக்கணக்கான போட்டியாளர்கள் கலந்து கொண்டதுடன் 100க் கணக்கிலான பொத்தமத தேரர்கள் கண்னியாஸ்திரிகள் சிங்கள தமிழ் விவசாயிகள் வேடுவ சமூகத்தினர் மற்றும் பலர் கலந்து கொண்டதுடன் இவர்களின் தேவை கருதி நிர்மானிக்கப்பட்ட நீர் தாங்கியும் திறந்து வைக்கப்பட்டது.

இதன் போது பௌத்த மத தேரர்களால் செத் பிரித் வழிபாடுகள் இடம் பெற்றதோடு மதிப்பிற்குறிய ஜனாதிபதியவர்களின் சிசிர பிவிசும எனும் திட்டத்தின் கீழ் இராணுவத்தினரால் குறுகிய காலப் பகுதிக்குள் 500 நீர் தாங்கிகள் மீள் திருத்தப்பட்டும் நிர்மானிக்கப்பட்டும் உள்ளது. இதன் போது விவசாயிகள் போன்றோரின் பங்களிப்போடு மதிப்பிற்குறிய ஜனாதிபதியவர்களின் தலைமையில் இவ் நீர்த்தாங்கியானது திறந்து வைக்கப்பட்டுள்ளது.   latest Running Sneakers | Women's Nike Air Max 270 React trainers - Latest Releases , youth boys nike sunray sandals clearance outlet