Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

04th April 2019 11:07:57 Hours

போர் வீரர்கள் மற்றும் சிவில் ஊழியர்களின் குடும்பங்களுக்கு உதவிகள்

இராணுவ பட்டாலியன் தலைமையகத்தின் வேண்டுகோளுக்கமைய லயன்ஸ் கழகத்தின் மகளீர் 306-C1 பிரவின் உதவியுடன் போரினால் பாதிக்கப்பட்ட யுத்த வீரர்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்தும் நோக்கத்துடன்இராணுவம் மற்றும் சிவில் ஊழியர்களின் குடும்பத்தினாருக்கு தையல் இயந்திரங்கள், ஆறு கணினிகள், வீட்டுத் தேவை உபகரணங்கள், இசைக் குழுவிற்கான புதிய ஆடைகள், பாடசாலை உபகரணங்கள் மற்றும் ஒரு செயற்கை கால்கள் இராணுவ தலைமையகத்தில் வைத்து இம் மாதம் (2) ஆம் திகதி வழங்கி வைக்கப்பட்டன.

இராணுவ தலைமையகத்தின் திட்டமிடல் அதிகாரி பதவி நிலை உத்தியோகத்தர் 1 லெப்டினன்ட் கேர்ணல் நளீந்திர மஹாவிதான அவர்களது அழைப்பையேற்று இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் வருகை தந்தார். அவருடன் 306-C1 லயன்ஸ் கழகத்தின் மாவட்ட ஆளுனரான லயன் சரத் விஜயசந்திர அவர்களும் இணைந்திருந்தார்.

போரின் பாதிப்புக்குள்ளான குடும்பங்கள் மற்றும் சிவில் ஊழியர்களின் குடும்பத்தாருக்கு முதன்முதலாக 11 ஜுக்கி தையல் இயந்திரங்கள் மற்றும் 6 கம்ப்யூட்டர்களும்,கொசு வலைகள், படுக்கை போர்வைகள், துணி, தலையணைகள், வெட்டுக்கருவிகள், கண்ணாடி போன்ற பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டன. அத்துடன் இராணுவ தலைமையகத்தின் இன்னிசை குழுவினருக்கு புதிய உடைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் நன்கொடையாக லயன்ஸ் கழகத்தின் மகளீர் பிரிவு அதிகாரிகள் மற்றும் இராணுவ தளபதியினால் இந்த நிகழ்வினூடாக வழங்கி வைக்கப்பட்டன.

மேலும் இந்த நிகழ்வில் லயன்ஸ் கழகத்தின் மகளீர் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளான திருமதி ஜயந்தி விஜயசந்திர, திருமதி அஜந்த விஜயசுந்தர, சாந்தனி பல்லியகுரு, திருமதி கிளியோபாட்ரா விஜயசேகர, திருமதி உபுல் காந்தி த சில்வா போன்றோர் பங்கு பற்றிக் கொண்டனர். jordan Sneakers | First Look: Nike PG 5 PlayStation 5 White Pink Black BQ6472-500 Release Date - SBD