Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

18th March 2019 20:30:10 Hours

ஹலால கிராமத்தில் படையினருக்காக இடம்பெற்ற வழிபாடுகள்

நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த படையினர்களை நினைவு படுத்தி ‘ரணவிர் உத்தம பிரானாம’ கருத் திட்டத்தின் கீழ் இடம்பெற்ற ‘ஆசிர்வாத மற்றும் அனுஷ்மரன தான’ நிகழ்வுகள் வெலிகமையில் உள்ள ஶ்ரீ போதிருக்காரம புரான விஹாரையில்இம்மாதம் (17) ஆம் திகதி இடம்பெற்றது.

இந்த பௌத்த நிகழ்விற்கு கொக்மடுவ சந்திராலோக தேரர் ஶ்ரீபோதிருக்காரம பூரன விகாரையின் விகாராதிபதி தெஹிவேந்திர சுமனாஜோதி அவர்களது அழைப்பையேற்று இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் வருகை தந்தார்.

இந்த ஆசிர்வாத பூஜை நிகழ்வுகள் நாட்டிற்காக உயர் தியாகம் செய்த இலங்கை சிங்கப் படையணியைச் சேர்ந்த ஹசலக காமினி மற்றும் விஷேட படையணியைச் சேர்ந்த கேர்ணல் லலித் ஜயசிங்க அவர்களை பிரதானமாக மையமாக்கி இடம்பெற்றன.

இதன் போது கேர்ணல் லலித் ஜயசிங்க அவர்களது பாரியாரான திருமதி கௌசல்யா மற்றும் ஹசலக காமினியின் தாயாரான திருமதி வயி.ஜே ஜூலியட் மஹியன்கனாய அவர்களும் இந்த ஆசிர்வாத பூஜைகளில் இணைந்து கொண்டனர்.

இராணுவ தளபதியின் பூரன ஏற்பாட்டுடன் கூடுதலான பௌத்த பக்தர்களின் பங்களிப்புடன் இந்த ஆசிர்வாத பூஜைகள் இடம்பெற்றன.

மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சத்யபிரிய லியனகே மற்றும் 58 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சுதத் பெரேரா அவர்களும்இந்த ஆசிர்வாத பூஜைகளில் கலந்து கொண்டனர். bridge media | Air Jordan 1 Retro High OG Retro High OG Hyper Royal 555088-402 , Fitforhealth