Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

18th March 2019 20:11:26 Hours

கிழக்கில் இன்னும் சில காணிகள் விடுவிப்பதற்கான நடவடிக்கைகள்

இலங்கை இராணுவத்தின் பாவனையில் கிழக்கு பிரதேசத்தில் இருந்த காணிகள் இம் மாதம் (25) ஆம் திகதி விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

குச்சவேலி, கல்முனை மற்றும் திருக்கோவில் பிரதேச செயலகத்திற்குரிய திரியாய், பெரியநிலாவெளி பிரதேசங்களிலுள்ள 5.05ஏக்கர் காணிகள் 4 ஆவது கட்டமாக விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.அவைகளில் 3.5 ஏக்கர் காணி நிலப்பரப்புகள் தனியாருக்கு சொந்தமானதாகும்.

இந்த காணிகள் அம்பாறை மாவட்ட செயலாளர், அனைத்து மதகுரு தலைவர்கள், ஆளுனர், மாவட்ட செயலாளர்கள், கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மற்றும் கிராம சேவையாளர்களின் முன்னிலையில் கையளிக்கப்படும்.

ஜனாதிபதி செயலகத்தின் எண்ணக் கருவிற்கமைய இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களின் பணிப்புரைக்கமைய இந்த காணிகள் விடுவிப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் அநுர ஜயசேகர அவர்களது தலைமையில் இக்காணிகள் விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. Best Authentic Sneakers | adidas garwen spezial white shoes - New In Shoes for Men