Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

17th February 2019 18:33:29 Hours

பொறிமுறை காலாட் படையணியின் 12 ஆவது வருடாந்த நிறைவு விழா

இராணுவ பொறிமுறை காலாட் படையணியின் 12 ஆவது ஆண்டு பூர்த்தி நிகழ்வை முன்னிட்டு அனைத்து சமயங்களது ஆசிர்வாத பூஜைகள் இடம்பெற்றன.

கதிர்காமம் கிரிவெஹெர தேவாலயம் மற்றும் ஶ்ரீ மஹா போதிய, ஶ்ரீ தலதா மாளிகையில் பௌத்த மத ஆசிர்வாத பூஜைகளும், வஹாகோட்ட றோமன் கத்தோலிக்க ஆலயத்தில் கிறிஸ்த்தவ ஆசிர்வாத வழிபாடுகளும், கலேவெல இந்து கோயிலில் ஆசிர்வாத பூஜைகளும், புவக்பிடிய பள்ளிவாசலில் சமய ஆராதனை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இம்மாதம் 16 ஆம் திகதி பொறிமுறை காலாட் படையணியின் 12 ஆவது ஆண்டு பூர்த்தி விழாவை முன்னிட்டு வருகை தந்த பொறிமுறை காலாட் படையணியின் படைத் தளபதி பிரிகேடியர் சுமித் அதபத்து அவர்களை அப்படையணியின் பிரதி கட்டளை தளபதி கேர்ணல் எஸ்.ஜே பிரியதர்ஷன அவர்கள் வரவேற்று பின்னர் படைத் தளபதிக்கு பொறிமுறை காலாட் படையணியினரால் இராணுவ கௌரவ அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி வைக்கப்பட்டன.

அத்துடன் படைத் தளபதிக்கு பொறிமுறை காலாட் படையணிக்கு உரிய கவச வாகனங்களின் அணிவகுப்பு மரியாதைகளும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த ஆண்டு பூர்த்தி நிகழ்வில் பொறிமுறை காலாட் படையணியின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி பிரேட்ரிகா அதபத்து அவர்களும் கலந்து கொண்டார். மேலும் ஆண்டு பூர்த்தி நிகழ்வை முன்னிட்டு படைத் தலைமையகத்தில் இன்னிசை ஒன்று கூடல் நிகழ்வுகளும் இம்மாதம் 18 ஆம் திகதி இடம்பெற்றது.Sports brands | 2021 New adidas YEEZY BOOST 350 V2 "Ash Stone" GW0089 , Ietp