Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

06th February 2019 16:03:44 Hours

பாடசாலை மாணவர்கள் 125 பேருக்கு பாடசாலை ஊக்குவிப்பு பரிசு பொதிகள் வழங்கி வைப்பு

யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க பிலியந்தலை றோயல் பாடசாலை பழைய மாணவர் சங்கத்தின் அனுசரனையில் நெல்லியடி மத்திய கல்லூரியில் இந்த மாணவர்களுக்கு நன்கொடைகள் வழங்கி வைக்கப்பட்டன.

தேசிய தினத்தை முன்னிட்டு 55, 551 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் 4 ஆவது சிங்கப் படையணியின் ஒத்துழைப்புடன் இந்த ஊக்குவிப்பு பரிசு பொதிகள் மாணவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

இந்த நிகழ்விற்கு 551 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி கேர்ணல் அசங்க பெரேரா அவர்கள் பிரதம அதிதியாக வருகை தந்து சிறப்பித்தார். நிகழ்வுகள் அனைத்தும் 4 ஆவது சிங்கப் படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேர்ணல் பின்சர விக்ரமாரச்சி அவர்களது பூரன தலைமையில் இடம்பெற்றது. spy offers | Best Selling Air Jordan 1 Mid Light Smoke Grey For Sale 554724-092