Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

28th January 2019 20:11:54 Hours

வன்னியில் இராணுவத்தினரது ஒத்துழைப்புடன் மீள்குடியேற்ற கிராமத்தில் விகாரை நிர்மானிப்பு

வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்களது வழிக்காட்டலின் கீழ் செல்லகினிகம கிராமத்தில் இந்த விகாரை இராணுவத்தினரது ஒத்துழைப்புடன் நிர்மானிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

கடந்த தினங்களில் வன்னி பாதுகாப்பு படைத் தளபதி செல்லகினிகம கிராமத்திற்கு விஜயத்தை மேற்கொண்ட போது ஒரு சிறிய பாழடைந்த குடியிருப்பு குடிசையில் மூன்று பலவீனமான கடுமையான கஷ்டங்களின் மத்தியில் அந்த குடிசையில் வாழ்ந்து வருவதை அவதானித்து அவர்களுக்கு தங்குமிட வசதிக்கான நிலையமும் விகாரையும் இராணுவத்தினரது ஒத்துழைப்புடன் இந்த கிராமித்தில் நிர்மானித்தார்.

சிறிலங்கா எயார்லைன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் திரு திமுது தென்னகோன் அவர்களது நிதி உதவியுடன் பெளத்த கன்னியாஸ்திரிகள் தங்குவதற்கான நிலையம் அமைக்கப்பட்டது.

மேலும் ராமநாயக மோட்டர்ஸ் நிறுவனத்தின் அனுசரனையில் 56 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரபாத் தெமடம்பிடிய அவர்களது வழிக்காட்டலின் கீழ் விகாரை மற்றும் புதும்மெதுரு போன்ற நிலையங்கள் நிர்மானிக்கப்பட்டது.

துருது போயா தினமான இம்மாதம் (20) ஆம் திகதி வன்னி பாதுகாப்பு படைத் தளபதி, பெரும்பாலான இராணுவத்தினர் மற்றும் 1000 பௌத்தமத பக்தர்களின் பங்களிப்புடன் ஶ்ரீ சுதர்சந்தராமய தேரர் அவர்களின் பிறார்த்தனை பூஜைகளுடன் இந்த விகாரை திறந்து வைக்கப்பட்டது. Best Nike Sneakers | Men's Footwear