Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

28th January 2019 14:08:12 Hours

வழங்கல் மற்றும் போக்குவரத்து பணியகத்தினால் படையினருக்கான மீன் வகைகள் அதன் தரம் தொடர்பான விரிவுரை

இராணுவத்தினரின் நுகர்விற்காக ஒப்பந்தகாரர்களினால் வழங்கப்படும் மீன்களின் வகைகளையும் அதன் தரத்தினையும் உறுதிப்படுத்தி கொள்வதற்காக வழங்கல் மற்றும் போக்குவரத்து பணியகத்தினால் புதிய வழிமுறைகளை அதிகாரிகள் மற்றும் ஏனைய படையினர்களுக்கும் அன்மையில் பனாங்கொடையில்; வைத்து அறிமுகம் செய்யப்பட்டன.

மேலும் வழங்கல் மற்றும் போக்குவரத்து பணியகத்தின் மேற்பார்வை பணிப்பாளர் கேணல் இரோஷா வனிகசேகர அவர்களின் அழைப்பின் பேரில் சமுகமளித்த கலா. ஜீவிக்கா ஜே கநேகமாராச்சி, தலைவர் அறுவடைக்குப் பின் தொழில் நுட்ப நிறுவனம் ஆர்.ஏ. மகேந்ர ஜயதிலக்க, கடல் உயிரியல் ஆராச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் ஆகியோரினால் இவ் விரிவுரை வழங்கப்பட்டது.

அதற்கமைய, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களின் அறிவுறுத்தலுக்கமைய வழங்கல் மற்றும் போக்குவரத்து பணியகமானது அதனுடைய விரவுரையினை மேற்கு இராணுவ படைத் தலைமையகம் மற்றும் மத்திய இராணுவ படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள அனைத்து அதிகாரிகளுக்கும் இவ்வருடம் ஜனவரி 4 ஆம் வாரப் பொழுதில் விரிவுபடுத்தியுள்ளது.

அதன்படி மேற்கு பாதுகாப்பு படை கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சத்தியப்பிரிய லியனகே அவர்களின் வழிகாட்டலின் கீழ் கடந்த (21) ஆம் திகதி திங்கற் கிழமை இடம் பெற்ற இவ் விரிவுரையில் மேற்கு பாதுகாப்பு படையைச் சேர்ந்த 62 அதிகாரிகளும் மற்றும் 138 ஏனைய படையினர்களும் கலந்து கொண்டனர்.

மேலும் மத்திய இராணுவ படைத் தலைமையகத்திலும் இவ் விரிவுரையாளர்களினால் 22 ஆம் திகதியன்று விரிவுரை வழங்கப்பட்டன.

இதில் 56 அதிகாரிகளும் மற்றும் 83 ஏனைய படையினர்களும் கலந்து கொண்டனர்.

வழங்கல் மற்றும் போக்குவரத்து பணியகமானது இந் நிகழ்ச்சி பற்றி அறிந்து கொள்ள அதிகாரிகள் மற்றும் ஏனைய அதிகாரிளுக்கான ஒத்துழைப்பை வழங்க திட்டமி;ட்டுள்ளன. affiliate link trace | Sneakers Nike Shoes