Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

26th January 2019 11:01:32 Hours

கிழக்கு இராணுவத்தினருக்கு ஊடகம் அதன் தாக்கம் தொடர்பான செயலமர்வு

வெலிகந்தையில் உள்ள கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் பணிபுரியும் இராணுவத்தினருக்கு ஊடகம் அதன் தாக்கம் தொடர்பான ஒரு நாள் முழுமையான செயலமர்வு படைத் தலைமையக கேட்போர் கூடத்தில் இம்மாதம் (23) ஆம் திகதி இடம்பெற்றது.

கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் அநுர ஜயகேகசர அவர்களின் அழைப்பையேற்று இராணுவ ஊடக ஆலோசகர் சிசிர விஜயசிங்க அவர்களினால் இந்த செயலமர்வில் விரிவுரைகள் நிகழ்த்தப்பட்டன.

இதன்போது 'ஊடகத்தின் நேர்மறை மற்றும் எதிர்மறை விளைவுகள்', 'அதன் பரிணாமம்', 'சமூக ஊடகம், 'ஊடகங்களின் மேலாண்மை', 'நடப்பு ஊடக போக்குகள்', 'சவால்கள்', 'மாஸ் கம்யூனிகேஷன்ஸ் அடிப்படை கருத்துகள்', 'வெகுஜன ஊடகத்தின் நடத்தை' தொழில்நுட்பங்கள், 'பொது விதிகள் மற்றும் நெறிமுறைகள்', 'வளர்ச்சி பத்திரிகை',போன்ற விடயங்கள் தொடர்பான விளக்கத்தை இந்த செயலமர்வில் நிகழ்த்தினார்.

இந்த செயலமர்வில் 40 இராணுவ அதிகாரிகளும் 150 படையினரும் இணைந்து பலனை பெற்றுக் கொண்டனர்.

இராணுவ ஊடக ஆலோசகருக்கு கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பதவி நிலை பிரதானி பிரிகேடியர் ஜி.டப்ள்யூ.எல் மஹின்கந்த அவர்களினால் அவரது சேவையை பாராட்டி நினைவுச் சின்னமும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த செயலமர்வில் நன்றியுறை கேர்ணல் சமிந்த விஜயரத்ன அவர்களினால் ஆற்றப்பட்டு இந்த செயலமர்வு நிறைவுற்றது.Adidas footwear | Yeezy Boost 350 Trainers