Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

25th January 2019 12:06:21 Hours

இராணுவ படையணிகளுக்கு இடையில் இடம்பெற்ற டெனிஸ் போட்டிகள்

இலங்கை இராணுவத்தின் 2018 ஆம் ஆண்டிற்கான டெனிஸ் சம்பியன் போட்டிகளின் இறுதிச் சுற்றுப் போட்டியானது இம்மாதம் (22) ஆம் திகதி வெலிகந்தையில் உள்ள கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் இடம்பெற்றது.

இராணுவ படையணிகளுக்கு இடையில் உள்ள 12 படையணிகளுக்கு இடையில் இந்த டெனிஸ் போட்டியானது இடம்பெற்றது. இந்த இறுதிச் சுற்றுப் போட்டி நிகழ்விற்கு பிரதம அதிதியாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் இராணுவ டெனிஸ் சங்கத்தின் தலைவர் மற்றும் கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் அநுர ஜயசேகர அவர்களது அழைப்பையேற்று வருகை தந்து சிறப்பித்தார்.

இந்த போட்டிகளில் ஆரம்பத்திலிருந்து 35, 45, 50 தனியார் டெனிஸ் , 35, 40, 50 இருவர் டெனிஸ் போட்டிகளும் இடமபெற்றது. இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த படைக் கலச் சிறப்பணி, பீரங்கிப் படையணி, பொறியியலாளர் படையணி, சமிக்ஞை படையணி, இலேசாயுத காலாட் படையணி, சிங்கப் படையணி, கெமனு காலாட் படையணி, கஜபா படையணி, விஜயபாகு காலாட் படையணி, இராணுவ சேவைப் படையணி, போர் கருவி படையணி, மின்சார பொறியியலாளர் படையணி, இராணுவ மகளீர் படையணியைச் சேர்ந்த படையணிகள் பங்கு பற்றிக் கொண்டது.

இந்த போட்டிகள் இரண்டு கிழமைகளாக தொடர்ந்து இடம்பெற்றன. இறுதிச் சுற்றுப் போட்டிகளில் மிகவும் திறமையாக விளையாடி விஜயபாகு காலாட் படையணி சம்பியனாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இரண்டாவது இடத்தை இராணுவ மின்சார பொறியியலாளர் படையணி பெற்றுக் கொண்டது.

மேலும் இராணுவ தளபதி மற்றும் கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதியினால் வெற்றிப் பெற்ற வெற்றியாளர்களுக்கு வெற்றிக் கிண்ணங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.Asics shoes | Nike Running