Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

25th January 2019 18:43:24 Hours

வெளிநாட்டு பிரதிநிதிகள் யாழ் பாதுகாப்பு படைத் தளபதியை சந்திப்பு

ஐக்கிய இராஜ்ஜிய தூதரகத்தின் உயர் பிரதானியான கிரேட் பிரிட்டன் மற்றும் அமெரிக்க பசிபிக் கட்டளை (PACOM) ஆக்மென்ட்ஷன் அணியினர் உள்ளடங்கிய வெளிநாட்டு பிரதிநிதிகள் இம் மாதம் (24) ஆம் திகதி யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி அவர்களை யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் உத்தியோகபூர்வமாக சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடாத்தினார்கள்.

மேலும் தென் ஆசிய திணைக்களம் மற்றும் இந்தியா ஒருங்கிணைப்பாளரான திரு பேர்குஸ் ஆல்ட், செயலாளர் திரு பால் பசுன் மற்றும் உயர் தூதரகத்தின் அரசியல் அதிகாரி திருமதி ஜோவித் அருளானந்தம் ஆகியோரும் இச்சந்திப்பில் இணைந்திருந்தனர்.

இந்த சந்திப்பின்போது யாழ் குடாநாட்டில் நிலவும் சமாதானம் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான விடயங்கள் ஆராயப்பட்டது.

கெப்டன் அர்மாண்டோ பெரால்ட், கெப்டன் டெர்ரி ஜான்சன், சார்ஜன் அலெக்சிஸ் ஓ'ஃபார்ல் மற்றும் சிரேஷ்ட சார்ஜன்ட் ஜோர்ஜ் ரிச்சர்ட்ஸ் போன்ற இராணுவ அதிகாரிகளும் இணைந்திருந்தனர்.

இவர்கள் மனிதாபிமான ரீதியாக உதவுதல் மற்றும் பேரழிவு நிவாரண நடவடிக்கைகளில் ஒருங்கிணைந்த பயிற்சி அமர்வுகள் தொடர்பான விடயங்களை இச்சந்திப்பின்போது கலந்துரையாடினார்கள். Buy Kicks | Fullress , スニーカー発売日 抽選情報 ニュースを掲載!ナイキ ジョーダン ダンク シュプリーム SUPREME 等のファッション情報を配信!